india

img

மோடியின் நண்பர்களுக்காக தடுப்பூசிக்கு அதிக விலை : ராகுல் குற்றச்சாட்டு.....

புதுதில்லி:
மோடியின் நண்பர்களுக்காக கொரோனா மருந்துகளுக்காக உலகிலேயே மிக அதிக விலையைத் தர வைக்கிறது அரசு என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ்பரவல் அதிகரித்துள்ளது. கொரோனாபெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்றுராகுல் காந்தி தொடர்ந்து கடுமை யாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமையன்று ராகுல் காந்தி தனது டிவிட்டரில், கொரோனா தடுப்பூசி மருந்துஆராய்ச்சிக்காக மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் பணம் தரப்பட்டது.இப்போது, இந்திய அரசானது அதே மக்களை, இந்த மருந்துகளுக்காக உலகிலேயே மிக அதிக விலையைத் தர வைக்கிறது. தோற்றுப்போன இந்த சிஸ்டம் மீண்டும் ஒருமுறை, மோடியின் நண்பர்களுக்காக நம் நாட்டு மக்களைத் தோற்கச் செய்திருக்கிறது. தனியாருடைய லாபத்துக்காக அரசுத் தொழில்நுட்பம் இலவசமாக அளிக்கப்பட்டதா என்ற பொருளியல் வல்லுநரின் கேள்வியையும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.பாரத் பயோடெக்கிற்கு அளிக்கப்பட்ட மக்கள் பணத்தில் கண்டுபிடிக்கப் பட்ட கோவேக்சின், யாருடைய அறிவுசார் உரிமை? இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.