புதுதில்லி;'
மோடியின் ஆசியுடன் முகேஷ் அம்பானிஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக மட்டுமின்றி ஆசியாவிலும் மிகப்பெரியபணக்காரராக உயர்ந்துள்ளார்.பொது முடக்கக் காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் 90 கோடி சம்பாதித்துள்ளார்.
இதே காலத்தில் இந்தியாவில் 24 சதவீத மக்கள் மாதத்திற்கு 3ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடியுள்ளனர். அம்பானியின் அதி கரிக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பை கொண்டு 40 ஆயிரம் முறைசாரா தொழிலாளர்களின் வறுமையை குறைந்தபட்சம் 5 மாதங்களுக்கு போக்க முடியும் என்று ஆக்ஸ்பாம் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா முடக்கக் காலத்தில் இந்தியாவின் 11 பணக்காரர்களின் அதிகரித்த சொத்து மதிப்பைக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும் அல்லது சுகாதாரத் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்றுஅந்த ஆய்வு அதிர்ச்சிதரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.