india

img

நாட்டில் 16.1 சதவிகிதமாக குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு.... வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா...

புதுதில்லி:
கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக, 2020-ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 16.1 சதவிகிதம் அளவிற்கு குறைந்ததாக உலக வங்கி மதிப்பீடுகள் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

உலகிலேயே மிகக் குறைவான பெண்தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. பெண் களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள்அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார் கள் என்பது தெரியவந்துள்ளது.உலக வங்கி மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்புவிகிதம் 2005-ஆம் ஆண்டு 26 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2019-ஆம் ஆண்டில் கூட 20.3 சதவிகிதமாக இருந்தது. அது 2020-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 15.1 சதவிகிதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 16.1 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.இது நமது அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசத்தை விடவும் குறைவாகும். 2020 ஏப்ரல் - ஜூன் காலத்தில், இலங்கையில் பெண் தொழிலாளர்பங்கேற்பு விகிதம் 33.7 சதவிகிதமாகவும், வங்கதேசத்தில் 30.5 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது-இந்தியாவில் வேலைக்குச் செல்லும்பெரும்பாலான பெண்கள், விவசாயம்மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களாகவே உள்ளனர். இந்நிலையில், கொரோனா ஊடரங்கு காலத்தில் 2020 செப்டம்பர் காலாண்டில் பெண்களின் வேலையின்மை விகிதமும் 15.8 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ஆண்தொழிலாளர்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 12.6 சதவிகிதமாக இருந்துள்ளது.