india

img

பாலியல் உறவுக்கு கணவன் கட்டாயப்படுத்தினால் விவாகரத்து கோரலாம்... கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு....

புதுதில்லி:
கணவன் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டால், அதனை விவாகரத்துக் கோருவதற்கான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம்தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் கீர்த்தி சிங்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கேரள உயர்நீதிமன்றம் விவாகரத்து கோருவதற்கு, கட்டாய பாலியல் வல்லுறவையும் ஒரு காரணியாக அங்கீரித்திருப்பதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் வரவேற்கிறது. மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் கணவர், மனைவியின் பெற்றோர் அளித்திட்ட தங்க நகைகள் மற்றும்ஆபரணங்களை சொந்தத் தேவைக்கு கையாடல் செய்தது மட்டுமல்லாமல், மனைவியின் பெற்றோரிடம் தொடர்ந்து பணம் கோரிவந்ததையும், கிட்டத்தட்ட 77 லட்ச ரூபாய்க்கும்அதிகமாக கோரியிருந்ததும் தெரிய வருகிறது. தன்னுடைய வர்த்தகத்தில் ஏற்பட்டகடன்களுக்காக இவ்வாறு பணம் தேவைப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். மேலும்கணவர், மனைவியிடம் பல தடவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கும், பல்வேறு பாலியல் வக்கிர நடவடிக்கைகளுக்கும் கட்டாயப்படுத்தியும் இருக்கிறார். மேலும் தன்னுடைய மனைவி வேறுசிலஆடவருடன் தொடர்புகள் வைத்திருந்ததாகவும் பொய்ப் புகார்கள் கூறியிருக்கிறார். இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் விவாகரத்து மனுவை அனுமதித்திருக்கிறது. கணவர் கோரிய மண வாழ்க்கை உரிமைகளை அளிக்கக்கோரும் மனுவை (restitutionof conjugal rights) தள்ளுபடி செய்திருக்கிறது.

மனைவியின் உடல், தனக்கே சொந்தம் எனக் கணவன் நம்புவதன் காரணமாகவே மணவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வு நடக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்முடிவினை அளித்திருக்கிறது.  பெண்ணுக்கு என்று தனிப்பட்ட உடல் இல்லை என்று கணவன் கருதுவதாகவும் கேரள உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்ணின் உடல் ஒரு பண்டம் என்கிற பழைய ஆங்கில சட்டம்நாட்டில் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றுகேரள உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இன்றைய சமூகத்தில் திருமணங்களில் கணவன்-மனைவி ஆகிய இருவருமே சமமான அந்தஸ்து உடையவர்களே என்றும்கணவன், மனைவியைவிட உயர்ந்த நிலையில் உரிமை படைத்தவன் என்று சொந்தம்கொண்டாடக்கூடாது என்றும் சரியாகவே தீர்முடிவிற்கு உயர்நீதிமன்றம் வந்திருக்கிறது. உடல்ரீதியாக ஒரு தனிநபரின் தனிப்பட்டசுயாட்சியை மீறும் செயல் எதுவாக இருந்தாலும் அல்லது எவ்விதமான அவமதிப்பினை ஏற்படுத்தினாலும் அது தனிநபரின் சுயாட்சியை மீறும் செயலாகும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்முடிவிற்கு வந்திருக்கிறது.

கணவன், மனைவியிடம்  பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டால் அது இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற போதிலும், அது பெண்ணின் மீதான வன்கொடுமை என்றும்,அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம் என்றும் நீதிமன்றம் முடிவுக்கு வரமுடியும் என்றும் கூறியிருக்கிறது.நாட்டிலுள்ள உரிமையியல் சட்டம் ஒருபெண்ணின்மீது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கட்டாயப் பாலியல் வன்புணர்வு உட்பட வன்கொடுமையைப் பிரயோகித்தால்அது வன்கொடுமையின்கீழ் வரும் என்று அங்கீகரித்திருப்பதுடன், விவாகரத்திற்கு ஒரு காரணியாக அதனை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது. குடும்ப வன்முறைச் சட்டம், ஆடவரின் உடல்ரீதியான, பாலியல் ரீதியான, இழி வார்த்தைகள் மூலமாக,உணர்வுப்பூர்வமாக மற்றும் பொருளாதாரரீதியாகத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை வன்முறை என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண் பல்வேறு உரிமையியல் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாட முடியும் என்று அங்கீகரித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும், மண உறவுகளில் வன்முறையிலிருந்து விடுதலைக்கான உரிமையை அங்கீகரித்திருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவானது அனைத்துவிதமான உடல்ரீதியான மற்றும் மன ரீதியான வன்முறையையும் குற்றம் என்று கூறயுள்ளது. இந்தச்சட்டத்தின்கீழ் கணவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டால் அதுவும் குற்றமேயாகும்.  எனினும், நடைமுறை வாழ்க்கையில் கணவனின் பாலியல் வன்புணர்வு ஓர்ஆழமான குற்றமாக, போதுமான அளவிற்குஅங்கீகரிக்கப்படவில்லை. ஒரு மனைவிஅதனை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்குச் செல்வதில்லை. இந்தப் பின்னணியில் இப்போது கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.கேரள உயர்நீதிமன்றம் விவாகரத்து பெறும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்பதையும் அங்கீகரித்திருக்கிறது. இது போதுமானதல்ல. பெண்கள் சம பங்காளிகளாகக் கருதப்பட வேண்டும். அவர்கள் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படக்கூடாது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெண்களுக்கு மணவாழ்க்கையிலும் சம அளவிற்குச் சொத்து உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீளவும் வலியுறுத்துகிறது.  மேலும், கணவரின் பாலியல் வன்புணர்வு தண்டனை விதிக்கும்சட்டத்தின்கீழும் ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஐஎன்என்)