புதுதில்லி:
இந்தியாவில் சனிக்கிழமையன்று தொற்று பாதிப்பில் இருந்து 39,972 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றியத் தொகுப்பில் இருந்து இதுவரை 45.37 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரம்- குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு இதுவரை, 45.37 கோடிக்கும் அதிகமான (45,37,70,580) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11 லட்சத்து 79 ஆயிரத்து 010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.மொத்தம் 42 கோடியே 08 லட்சத்து 32 ஆயிரத்து 021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.