india

img

புதிய எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யத் தடை - ஒன்றிய அரசு

எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எறியும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் காரணத்தால் ஒன்றிய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமான உத்தரவை வெளிட்டுள்ளது. 

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டாம் என எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விபத்துக்கள் குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் உடன் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தான் அனைத்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும், தீ பிடித்த வாகனங்களின் பேட்ச் வாகனங்களை மக்களிடம் இருந்து திரும்பப் பெற்று ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. 

ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி ஓலா, ஓகினாவா, ப்யூர் ஈவி ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 7000 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.