புதுதில்லி:
தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதாவது: அடுத்த மூன்றுநாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 28,90,360 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. இதுவரை, 17.15 கோடி (17,15,42,410) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும்,யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மே 6 அன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,26,10,905 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. 89,31,505 கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன.தமிழ்நாட்டுக்கு இதுவரை 71,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 சதவீதம் வீணானது. இதனையும் சேர்த்து, 68,47,457 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,56,493 தடுப்பூசி டோஸ்கள்தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசிடோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 1.61 சதவீதம் வீணாகியது. இதனையும் சேர்த்து, 2,10,379 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,86,751தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரி வசம் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.