புதுதில்லி:
சுரங்கம், மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகம் ஆகிய தொழில் களைத் தொடர்ந்து சொகுசுக்கப்பல்களை இயக்கும் திட்டத்திலும் கவுதம் அதானிஇறங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இருந்து இலங்கை, வங்கதேசம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணப் படகுகளை (ferry) இயக்க சாகர்மாலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.அதனடிப்படையில், காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் வரையிலும், விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் வரையிலும் பயணப் படகுகளை இயக்க, ஷ்ரேயஸ் ஷிப்பிங், அங்ரியா குரூஸ், சமுத்ரா மெரைன், எஸ்குயர் ஷிப்பிங்உள்ளிட்ட 80-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்நிலையில், இந்த வழித்தடங்களில், சொகுசுக் கப்பல்களை (Cruise) இயக்கும் போட்டியில், அதானி நிறுவனமும் குதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம், தமிழகத்தின் காட் டுப்பள்ளி துறைமுகங்களை கைப்பற்றிய அதானி, இலங்கையின் கொழும்பு துறைமுக முனையத்திற்கும் குறிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.