world

img

இந்தியாவுக்கு மருந்துகளை அனுப்புகிறது வங்கதேசம்....

டாக்கா;
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை போதிய அளவுக்கு மக்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளன.

இதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் உள்பட அவசரகால தேவைக்கான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திட வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட தகவலை அந்நாட்டு வெளியுறவு செயலாளர் மசூத் பின் மோமென் இந்தியா எங்களிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை கேட்டிருந்தது. அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.இவற்றில் கோவிட் 19 வைரசுக்கு எதிரான 10 ஆயிரம் மருந்து குப்பிகள், 30 ஆயிரம் பி.பி.இ. உபகரணங்கள் மற்றும் ஜிங்க், கால்சியம், வைட்டமின் சி மற்றும் பிற தேவையான சத்து மருந்துகள் ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.