india

img

4 ஆண்டுகளில் 3,302 பேர் மீது துப்பாக்கிச் சூடு; 146 பேர் பலி.... ஆதித்யநாத் ஆட்சியின் காட்டுத் தர்பார்....

புதுதில்லி:
உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் 3,302 பேர்துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தப்பட்டு இருப்பதும், 146 பேர் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே, கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் பெயரில் காவல்துறையின் காட்டுத் தர்பார் அரங்கேறி வருகிறது. மார்ச் 2017-இல் ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து, இதுவரை 8 ஆயிரத்து 472 காவல்துறை என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளன. குறிப்பாக, மீரட், ஆக்ரா, கான்பூர், பரேலி மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.குற்றம் சாட்டப்பட்டவர்களை, என்கவுண்ட்டர் செய்து, ஒரேயடியாக சாகடிக்காமல், அவர்களை நடைப்பிணமாக்குவதை “ஆபரேஷன் லாங்டா” “Operation Langda (Lame)” என்று காவல்துறையினர் விவரிக்கின்றனர். இதன்படி ஆயிரக்கணக்கானோர் இந்தஎன்கவுண்ட்டர்களில் உடல் உறுப்பு பறிக்கப்பட்டுள்ளனர். முழங்காலுக்கு கீழேசுடப்பட்டு முடமாக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுதொடர்பான கேள்விகளுக்கு உ.பி. காவல்துறையால் துல்லியமான பதில்களை அளிக்கமுடியவில்லை.மாறாக, காவல்துறையில் 13 பேர்கொல்லப்பட்டனர். 1,157 பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தடுப்பதற்காகவே துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டனஎன்று ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.உ.பி. மாநிலத்தில், காவல்துறை என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சிகளும், மனித உரிமைகுழுக்களும் கவலை தெரிவித்துள்ளன. 2019-இல் என்கவுண்ட்டர்கள் அதிகரித்தபோது, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றமே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.