india

img

பீகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

பீகார் சட்ட பேரவைத்தேர்தல் தேதியை மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
பீகாரில் உள்ள 243 சட்ட பேரவை தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. 
நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் பீகார் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளார்.