விசாகப்பட்டினம்
வங்கக்கடலில் உருவான குலாப் புயல் ஆந்திராவின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு கரையைக் கடந்தது.
இந்த புயலால் 24 மணிநேரத்தில் மட்டும் 282 மிமீ மழை பொழிந்து விசாகப்பட்டினத்தை வெள்ளகாடாக மாற்றியது குலாப் புயல். மேலும் கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதீத கனமழையால் விசாகப்பட்டினம் திணறி வருகிறது. 2005-ஆம் ஆண்டு மேற்கு கடற்கைரையை புரட்டியெடுத்த பியார் புயல் 194 மிமீ மழையை கொடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. அதன் பின்பு தற்போது குலாப் புயல் விசாகப்பட்டினத்தை வெளுத்து வாங்கிவிட்டு சென்றுள்ளது.