ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை. மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரம் செய்தால் 50 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்த நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது