புதுதில்லி, ஜூன் 11-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 1.62 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,92,74,823 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 3403 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,63,079 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்வடைந்துள்ளது.