india

img

சாதிப் பெயரை காரில் எழுதியவருக்கு நோட்டீஸ்... உ.பி. போக்குவரத்துத்துறை நடவடிக்கை

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரும், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் யாதவ், ஜாட், குஜ்ஜார், பிராமணர், பண்டிட், சத்திரியர், லோதி, மெளரியா, சக்சேனா என சாதிப்பெயரை குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. இது சமீபகாலமாக பெருமளவிற்கு அதிகரித்து, ஆங்காங்கே சண்டை, சச்சரவுகளுக்கு காரணமானது. மோதல்களும் ஏற்பட்டு வந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷல் பிரபு என்பவரும் இதுதொடர்பாக, அண்மையில் பிரச்சனையைக் கிளப்பியிருந்தார்.

இதையடுத்து, வாகனங்களில் சாதி பெயரை போடக்கூடாது என்று உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போக்குவரத்துஆணையர், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதனை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்றும் அவர் அறிவித்திருந்தார்.போக்குவரத்து ஆணையரின் இந்த அறிவிப்பின்படி, லக்னோவில், தான் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை‘சக்சேனா ஜி’ (Saxena Ji) என்று காரில் எழுதி வைத்திருந்தஇளைஞருக்கு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

;