headlines

img

நல்லதொரு மாற்றம்

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது நல்ல மாற்றம்.  கடந்த 2019 நவம்பர் மாதம் பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பதவி புதிதாக அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த நடைமுறைக்கு பல்வேறு ஆசிரி யர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

ஆயினும் அதிமுக ஆட்சி நிர்வாக வசதிக்காக இந்த புதிய பதவி உருவாக்கப் பட்டது என்று கூறி அதை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அத்துடன் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் இயக்குநரின் பணியை ஆணையரே செய்வார் என்றும் கூறிவிட்டது. 

தற்போது மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டு புதிய இயக்குநராக க.அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சிறிதெனினும் சரி யான நடவடிக்கையாகும். ஏனெனில் கல்வித் துறை உயர் அதிகாரிகள் இயக்குநராக நிய மிக்கப்படும்பொழுது துறையில் உள்ள பல்வேறு விசயங்கள் தொடர்பாக நீண்ட அனுபவத்துடன் கையாளும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறன்றி ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக இருந்து கவனிக்கும்போது அத்தகைய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 

இந்த ஆணையர் நடைமுறை என்பது ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதிதான். பாஜக அரசு எவ்வாறு பகுதி பகுதியாக மாநிலங்களின் பர வலான எதிர்ப்பையும் மீறி திணித்துக் கொண்டு வந்ததோ அதைப் போலவே அதிமுகவும் அவர்களது எண்ணத்தை இங்கே அமலாக்கி வந்தது. அதற்கு கல்வித்துறை நிபுணர்களும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதனை அலட்சியப்படுத்தியே வந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பதவி நடைமுறை சிறிது என்றாலும் நூறாண்டு வரலாறு கொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு அவசிய மானது. பாஜக ஆட்சியின் தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு ஏற்புடையதல்ல என்று தமிழ்நாட்டின் அதிமுக, பாஜக தவிர்த்த பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற் கென தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கென ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மாநில ஆளுநர் மூலம் பாஜக அரசின் கொள்கை களை நடைமுறைப்படுத்துவதற்கு  ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்துவது அத்து மீறல் வழக்கமாக அமைந்திருந்தது. 

அது தற்போது ஓரளவு மட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை விரைவில் இறு திப்படுத்தி சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்று  நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

;