headlines

img

திடீர் மரணங்கள்: மாறும் காரணங்கள்

திடீர் மரணங்கள்: மாறும் காரணங்கள்

உலக சுகாதார அமைப்பின் 2023ஆம் ஆண்டு “நோய் பாதிப்பு ஆய்வறிக்கை” முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் தொற்று நோய்களால் ஏற்பட்ட மரணங்கள் குறைந்து, தொற்றா நோய்கள் முதன்மை காரண மாக உயர்ந்துள்ளன. லான்செட் இதழில் வெளி யான இந்த விரிவான ஆய்வு 16,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் உழைப்பின் பயனாகும்.

1990இல் இந்தியாவில் தொற்றுநோய்கள்  மரணத்துக்கு முதன்மையான காரணமாக இருந்தன. அப்போது ஒரு லட்சம் பேருக்கு 1,513.05 பேர் என மரண விகிதம் இருந்தது. இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 2023இல் இந்த விகிதம் 871.09 ஆக குறைந்துள்ளது. இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்கள் தற் போது முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதய நோய் மட்டும் ஒரு லட்சம் மக்களுக்கு 127.82 மரண விகிதத்தை பதிவு செய்துள்ளது. முதலில் இருந்த கோவிட் நோய் 2023இல் இரு பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நுரையீரல் அடைப்பு நோய், சுவாசப் பாதிப்புகள், புற்றுநோய் வகைகள் முக்கிய இடங்களை பிடித்துள்ளன.

நேர்மறையான செய்தி என்னவெனில், இந்தி யர்களின் ஆயுட்காலம் கணிசமாக உயர்ந்துள் ளது. ஆண்களுக்கு 1990இல் 58.12 ஆண்டுகளாக இருந்தது தற்போது 70.24 ஆண்டுகளாகவும், பெண்க ளுக்கு 58.91இல் இருந்து 72.95 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது. 

ஆனால் புதிய சவால்கள் எழுந்துள்ளன. மனநலக் கோளாறுகள் 63 சதவீதமும் மன அழுத்தம் 26 சதவீதமும் அதிகரித்துள்ளன. பாலியல் வன் கொடுமை, குடும்ப வன்முறை இதற்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள் ளன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடும் இரும்புச்சத்து பற்றாக் குறையும் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. மாசுபாடு, சுத்தமற்ற நீர், சுகாதாரமின்மை இன்னும் சவால்களாக நீடிக்கின்றன

15 முதல் 49 வயதினரிடையே பாதுகாப்பற்ற உடலுறவு, தொழில் சார்ந்த காயங்கள், அதிக உடல் எடை குறியீடு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித் தல், உயர் இரத்த சர்க்கரை, சிறுநீரகப் பாதிப்புகள் அபாயகரமாக பெருகி வருகின்றன.

இந்த ஆய்வு, கொள்கை வகுப்பாளர்களுக்கு தெளிவான செய்தியை அளிக்கிறது. தடுப்பு நடவ டிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வேக மாக நகரமயமாகும் இந்தியாவில் தொற்றா நோய் களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். மனநல சிகிச்சை வசதிகளை அதிகரிக்க வேண்டும். குழந் தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான ஊட்டச் சத்து திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். பெண் கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, சீரான உணவு,  மன அமைதி ஆகியவற்றை வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் சிறப்பு சிகிச்சை மையங்களை நிறுவ வேண்டும். நோய்களை முன்கூட்டியே கண்டறிய வருடாந்திர பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வையும் உறுதி செய்வதே இன்றைய முதன்மைத் தேவையாகும்.