headlines

img

தடம் புரளும் ரயில்வே துறை

தடம் புரளும் ரயில்வே துறை

உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றான இந்திய ரயில்வேத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் அவ்வப்போது கூறுகி றார்கள். ஆனால் உண்மையில் ரயில்வேத் துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மய மாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை நிறுவ னங்களை சிதைத்து, சின்னாபின்னமாக்கி தங்க ளுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளான அம்பானி, அதானி போன்றவர்களை கொழுக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இதன் ஒரு பகுதியாக ரயில்வேத் துறையும் தனியார்மயத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்ச மாக தடம் புரண்டு வருகிறது. 

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட் கவுண்டர்களை தனியாரிடம் ஒப்ப டைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதா கத் தெரிகிறது. ஏற்கெனவே சாதாரண டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இதை முற்றாக தனியார் ஏஜென்சிகளிடம் கொடுக்க தற்போது முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக ஒட்டு மொத்த ரயில் டிக் கெட் விற்பனையை தனியாரிடம் கொடுப்பதற் கான முன்னோட்டமே இது. டிக்கெட் விநியோகத் திற்கு நிரந்தரப் பணியாளர்களை பயன்படுத்துவ தை விட தனியாரிடம் தருவது லாபகரமாக இருக் கும் என்று அதிகாரிகள் நியாயப்படுத்துகிறார்கள்.

வேலைவாய்ப்பு கணிசமாக குறையும் என்பது மட்டுமின்றி, பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத் தும் திட்டமாகும் இது. ஏற்கெனவே ரயில்வே துறை யில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை அதே பணி யில் அத்தக்கூலிகளாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இப்போது டிக்கெட் விநியோக மும் முற்றாக தனியாரிடம் செல்லும் போது வேலை வாய்ப்பு கணிசமாக குறையும்.

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயணக் கட்டண சலுகை கொரோனாவை கார ணம் காட்டி நிறுத்தப்பட்டது. கொரோனா சென்ற பிறகும் அந்த சலுகை புதுப்பிக்கப்பட வில்லை. பய ணிகள் பாதுகாப்புக்கும் உரிய முதலீடு செய்யப்படு வதில்லை. மக்கள் பயன்பாடு தொடர்புடைய ஒரு துறையை லாப நஷ்ட கணக்கு பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்குவது எதிர்காலத் தில் பெரும் இன்னலை ஏற்படுத்தும். 

தொலைத் தொடர்புத் துறையை திட்டமிட்டு தனியாருக்கு கொடுத்தது போல, பொது போக்கு வரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ரயில்வே எனும் பொதுத்துறை நிறுவனத்தையும் சீரழிக்க மோடி அரசு முனைந்து வருகிறது. பல்வேறு பெயர் களில் தனியார்களால் இயக்கப்படும் ரயில்கள் ஏழை மக்களின் பயணத்தை எட்டாக்கனியாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ரயில்வேத் துறையை  படிப்படியாக தனியார்மயமாக்குவது முற்றிலும் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கை யாகவே அமையும்.