headlines

img

கனிம வளங்களை தனியார் சுரண்ட உதவும் உத்தரவு

கனிம வளங்களை தனியார் சுரண்ட உதவும் உத்தரவு 

இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களு க்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிக ளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  அரசு கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு மற்றும் யுக்தி ரீதியான காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு தேவையில்லை என்றும் முக்கிய கனிமங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா கவும் அரசு வாதிடுகிறது. பாதுகாப்பு அமைச்சகத் திற்கு தேவையான முக்கியமான சாதனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் கனிமங்கள் இவை என்றும் அரசு கூறுகிறது. 

சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சமாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு உள்ளது. “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994 ஆம் ஆண்டில் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு சேர்க்கப்பட்டது. 1992இல் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் உலக நாடுகளின் முக்கிய கருத்துகளின் அடிப்படையிலும் இது கொண்டு வரப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் மிக முக்கிய அம்சமே பொதுமக்கள் கருத்துக் கேட்புதான்.  

தங்கள் பகுதிகளில் வரவிருக்கும் திட்டங்கள் மக்களின் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்ப டையில் தான் அமையும். அதுவே சரியானது. ஜன நாயக நடைமுறையும் கூட. ஆனால் ஒன்றிய அரசின் தற்போதைய உத்தரவு அதன் முக்கியத்து வத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. பெரும் பான்மை மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். கருத்துக் கேட்பு நடத்தப்படாமல் இத்த கைய திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் நில உரிமையை இழப்பர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். 

டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள் ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட அரசு வழிவகுத்தது. இதற்காக 2023ஆம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட் டத்தை அரசு கொண்டு வந்தது. தனியார் பெரு நிறுவனங்கள்  இயற்கை வளங்களைச் சுரண்டவே ஒன்றிய அரசின் உத்தரவு உதவும் என்பதால் இதை துவக்க நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் பழனி, கல்வராயன் மலை, ஜவ் வாது மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்புத் தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலை இதனால் உருவாகலாம். ஏனெனில், இத் தகைய கனிமங்கள் தான் இனி “புதிய எரிசக்தி வளம்”.