headlines

img

நீதியின் படுகொலை

நீதியின் படுகொலை

பத்தரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் வந்துள்ள தீர்ப்பு, இந்தியாவின் நீதி வழங்கும் முறையின்  மீதான நம்பிக்கையையே கொன்றுவிட்டிருக்கி றது. ஆறு அப்பாவி மக்களைக் கொன்று, நூறு பேரை காயப்படுத்திய இந்தக் கொடூரமான பயங்க ரவாத தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்ற வாளிகளும் “ஆதாரம் இல்லை” என்ற போலிக் காரணத்தைக் காட்டி விடுவிக்கப்பட்டிருக்கி றார்கள்.

முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்,  இராணுவ லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட இந்துத்வ பயங்கரவாதிகள் நீதிமன்றத் திலிருந்து தலை நிமிர்ந்து வெளியேறியிருக்கும் காட்சி, நீதித்துறையின் கரும்புள்ளியாக நிற்கிறது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெளி வாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது என்ன? முஸ்லிம் சமுதாயத்தை பயமுறுத்துவதற்காக வும், வகுப்புவாத பதற்றத்தை உருவாக்குவதற்காக வும், நாட்டின் உள் பாதுகாப்பை அச்சுறுத்துவ தற்காகவும் இந்த சதித்திட்டம் நடத்தப்பட்டது என்பதுதான்.  

மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்னவென் றால், இந்தக் குற்றவாளிகளை பாஜக-ஆர்எஸ்எஸ் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது. பிரக்யா சிங் தாக்கூரை பாஜக எம்.பி. வேட்பாளராக்கி, போபால் தொகுதியிலிருந்து வெற்றி பெறச் செய்தது. இது, பயங்கரவாதிகளை கெளரவிப்பது மட்டுமல்ல, அவர்களை அரசியல் தலைவர்க ளாக உயர்த்துவது.

கேடுகெட்ட விஷயம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் “எந்த இந்துவும் பயங்கரவாதி ஆக முடியாது” என்று பேசினார். இது தற்செயல் நிகழ்வா, அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமா?

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, நீதி இரட்டை அளவுகோலில் தான் வழங்கப்படுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் வெறும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத வழக்குகள் புனையப்பட்டு, பல ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்படுகிறார் கள். ஆனால், இந்துத்வ பயங்கரவாதிகள் தெளி வான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் விடு விக்கப்படுகிறார்கள். சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் ஷரீஃப் தர்காவில் குண்டுவெடிப்பு தாக்குதல், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு - எல்லாவற்றி லும் இதே கதைதான். மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் வெறும் சாதாரண பயங்கர வாதிகள் அல்ல. அவர்களுக்கு அரசியல் பாது காப்பு கிடைத்திருக்கிறது. நீதித்துறையில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

மாலேகான் தீர்ப்பு நீதியின் படுகொலை மட்டு மல்ல, மோடி அரசின் மதச்சார்புநிலையின் சான்று மாகும். இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இந்துத்வ பயங்கரவாதம் சட்டத் துக்கு அப்பாற்பட்டது என்ற செய்தியை அனுப்பு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள் ளது போல, அரசாங்கம் உடனடியாக இந்தத் தீர்ப்பு க்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். பயங்கரவாத வழக்குகளில் என் ஐ ஏ நீதிமன்றத் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.