headlines

img

அடங்கா போர் வெறி!

அடங்கா போர் வெறி கொண்ட இஸ்ரேல் தற்போது லெபனான் மீது தாக்குதலைத் தொடுத் திருக்கிறது.  இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது.  

அமெரிக்க ஆதரவுடன் லெபனானை மற் றொரு காசாவாக மாற்றிவிடலாம் என  இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. திங்களன்று ஓரே நாளில் நடத்திய தாக்குதலில் மட்டும் 50 சிறுவர்கள், 94 பெண்கள் உட்பட 558 பேர் உயிரிழந்துள்ளனர். 1935 பேர் காயமடைந்துள் ளனர்.  ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு புறம் அமெ ரிக்க ஜனாதிபதி பைடன் மத்திய கிழக்குப் பகுதி யில் அமைதி நிலவ வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தாக்கி அழிப்போம்;  லெபனானின் வடக்கு பகுதியில் மீண்டும் இஸ்ரேலியர்களை குடியேற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்.

காசாவில் நடைபெறும் போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற இடங்களுக்குப் பரவவிடாமல் தடுப்பேன் என்று ஜோ பைடன் உறுதி அளித்து  ஓராண்டுக் காலம் முடிந்து விட்டது. ஆனால் இஸ்ரேல்  காசாவைத் தொடர்ந்து, லெபனான், ஈரான் எனத் தாக்குதலை விரிவுபடுத்தி வரு கிறது. அதோடு  சர்வதேச சட்டங்கள் மற்றும் பாது காப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதிக்கிறது. 

நிலைமை மோசமடைந்துள்ள போதிலும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கு வதை நிறுத்தவில்லை. உண்மையில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை விரும்பினால் முதலில் இஸ்ரே லுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  

ஏற்கனவே அமெரிக்க ஆதரவுடன்  கடந்த  ஓராண்டாகக் காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 41,467 பேர் கொல்லப்பட்டிருக்கின்ற னர். 95,921 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரா னில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் ஈரானைப் போருக்கு இழுத்தது. கடந்த வாரம் லெபனானில் பேஜர் கருவிகள், வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகளை வெடிக் கச் செய்து 39 பேரைப் படுகொலை செய்து, லெபனானையும் போருக்குள் இழுத்து, தற்போது வான்வெளி தாக்குதலைத் தீவிரப்படுத்தியி ருக்கிறது. 

பதிலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இதுவரை இல்லாத வகையில் முதன் முதலாக  இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்நிலையில் மிக முக்கிய திருப்பமாக ஈரானுக்கு ஆதரவாகவும்,  ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சீன அரசு உறுதியாக இருக்கும் என, சீனா இஸ்ரேலை எச்சரித்திருக்கிறது.  இஸ்ரேலின் அடங்கா போர் வெறி மீண்டும் ஒரு உலகப்போரை உருவாக்கி டக் கூடாது. உலக நாடுகள் இஸ்ரேலைத் தனிமைப்படுத்திட வேண்டும்.