headlines

img

தொடரும் துயரம்!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீன வர்கள் தாக்கப்படுவதும், படகுகள், மீன்பிடி வலை கள் சேதப்படுத்தப்படுவதும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவ தும், பெரும் தொகையை அபராதமாக விதிப்ப தும் தொடர் கதையாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததாகவும், படகுகளை மூழ் கடிக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  படகுகள் மீன் பிடிக்க முடியாமல் வெறுங்கையு டன் கரை திரும்பியுள்ளன.

இலங்கையில் அனுர குமார திஸா நாயக்க தலைமையில் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசு நம்பிக்கையளிக்கக் கூடிய பல்வேறு அறி விப்புகளை வெளியிட்டுள்ளது. உள்நாட்டுப் போரி னால் பெரும் சேதங்களை சந்தித்துள்ள இலங்கை யில் அனைத்துப்பகுதி மக்களிடையே நல்லிணக் கம், ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்படும் என புதிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் கடுமையான பொரு ளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தேசத்தை மீட்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  செப்.21 ஆம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திட இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அயல்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை யில் 160 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டு  மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியா கியுள்ளது. 

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படும் மீனவர்களை விடுவிக்க கோடிக்கணக்கான ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என முந்தைய இலங்கை அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி மீனவர்களால் நினை த்துப் பார்க்க முடியாத அளவு அபராதம் இலங்கை அரசால் விதிக்கப்படுகிறது. எனவே இந்திய, இலங்கை அரசுகள் இணைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பது அவசியம்.