headlines

img

இளம் பெண்ணின் உயிரைப் பறித்த மூலதனம்

புனேயில் எர்ன்ஸ்ட் & யங் என்ற முன்னணி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பட்டய கணக்க ராக பணிபுரிந்து வந்த அன்னா செபாஸ்டியன் என்ற 26 வயது இளம் பெண்ணின் துயரமான உயிரிழப்பு, பணியிடங்களில் பணியாளர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சூழல் குறித்த விவா தங்களுக்கு மீண்டும் வழிவகுத்துள்ளது. புதுமை மற்றும் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் பணிச்சூழல் வழி வகை செய்வதாகச் சிலர் தவறாக வாதிடு கின்றனர்.

 “சாத்தியமற்ற இலக்குகளை முடிப்பதற்காகத் தொடர்ச்சியாக  நள்ளிரவிலும் வார இறுதி நாட்க ளிலும் வேலை செய்ய அந்த பெண்ணுக்கு கொடுக் கப்பட்ட அழுத்தம், திறமை வாய்ந்த ஓர் இளம்பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டது.   இந்த பெண்ணின் இறப்பு, இந்தியாவில் பணிச்சூழல் குறித்த விவாதத்தைக் கிளப்பிய முதல் சம்பவம் அல்ல. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இன்ஃபோ சிஸ் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். 

சர்வதேச தொழிலாளர் மையம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் வேலை செய்பவர்களில் பாதிப்பேர், வாரத்தில் 49 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை பார்ப்ப தாகவும் இது உலகிலேயே அதிகப்படியான வேலை நேரம் என்றும் தெரிவித்துள்ளது. 

1990களின் தாராளமய, தனியார்மய, உலகமய பொருளதாரக்கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் சேவைத் துறைகள் பெருமளவில் தொ டங்கப்பட்டன. அத்துறையில் தொழிலாளர் சட் டங்கள் புறக்கணிக்கப்பட்டன. 24 மணிநேரமும் வேலை செய்யத் தயாராக இருக்கும் வகையில் இந்தியாவின் பணிச்சூழல் மாற்றப்பட்டது. ஊழி யர்களின் நலன் குறித்து நிறுவனங்களுக்கோ அந்த நிறுவனங்களை கண்காணிக்கும் அர சுக்கோ கொஞ்சம் கூட அக்கறை இல்லை. 

“அதிகப்படியான வேலைப் பளு காரணமாக ஏற்பட்ட அழுத்தமே” தனது மகளின் ஆரோக்கி யத்தைப் பாதித்து அவரின் இறப்புக்கு வழிவகுத்த தாக அன்னாவின்  பெற்றோர் குற்றம் சாட்டி யுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தக்கூட தயாராக இல்லை. மேலும் இளம்  மகளை இழந்த குடும் பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியபோதிலும் ஆளும் கட்சித் தரப்பில் ஒருவரும் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகை யில் இளம் வயதினரை கல்வி நிறுவனங்களும் குடும்பங்களும் தயார்படுத்தவேண்டும்; கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறுகிறார். 

கார்ப்பரேட் மூலதனத்தின் லாப வேட்கை அதி கரித்துள்ளது. இது ஊழியர்களது நலனை பாது காக்காது; உயிரைப் பறிக்கவே வழிவகுக்கும்.