headlines

img

பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கு!

பிரேசில், ஈக்வடார், அர்ஜென்டினா, பொலி வியா உள்ளிட்ட 35 நாடுகளின் முன்னாள் ஜனாதி பதிகள், பிரதமர்கள்; இந்தியா, கொலம்பியா, மலேசியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பாகிஸ்தான் உட்பட 73 நாடுகளில் இருந்து இடதுசாரி கட்சி எம்பிக்கள் உள்ளிட்ட 600 எம்.பி.,க்கள் கியூபாவை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

சர்வதேச முற்போக்கு அமைப்பினால் (progressive international ) ஒருங்கிணைக்கப்பட்டு இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.  

2021 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தீவிர கம்யூனிச வெறுப்பு கொண்ட அதிதீவிர வலதுசாரியான டொனால்டு டிரம்ப்,  கியூபாவை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார்.

ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. கியூபாவைக் குற்றம்சாட்ட எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத நிலையில்   கம்யூனிச வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான  நடவடிக்கை என அமெரிக்காவின் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. 

டிரம்பிற்கு பிறகு ஜனாதிபதியான பைடனும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்கா வின் இத்தகைய கொடிய நடவடிக்கைகளின் காரணமாக உலகளவில் வர்த்தகம் மேற்கொள்ள இயலாமல் கியூபா கடுமையான நிதி பற்றாக்குறையில் தள்ளப்பட்டுள்ளது.

கியூப மக்களின் வாழ்க்கையில் பொருளா தார நெருக்கடியை உருவாக்கி அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடலாம் என அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் தான் கியூபா மீதான பொரு ளாதார தடைகளை நீக்கக்கோரியும், அதே போல  தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டி யலில் இருந்து நீக்கக் கோரியும் இடதுசாரிகள், முற்போக்கு அமைப்புகள் மீண்டும் வலுவாக குரல் எழுப்பியுள்ளனர். 

இந்தக் குரலுக்கு அமெரிக்கா செவி சாய்க்க  வேண்டும். ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள், இதை வலுவாக வற்புறுத்த வேண்டும். ஜனநாய கம் பற்றியும் பிற நாடுகளில் மக்களின் உரிமைகள் பற்றியும் வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, கியூபாவை நசுக்குவது கடும் கண்டனத்திற்குரி யது. கியூபா போன்றே வடகொரியா மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்ணற்ற தடை களை விதித்துள்ளது. சோசலிச நாடுகள் மீதான இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்கு தலை தடுக்காவிடில் உலகின் பல நாடுகள் இந்த ஆபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்.