headlines

img

இலவச மின்சாரம் இனி பழங்கதைதானா?

கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் இதுவரை முன்வைத்த அனைத்து கோ ரிக்கைகளையும், நிபந்தனைகளையும் நிறை வேற்றுவதில் முனைப்புக் காட்டும் மோடி அரசு, மறுபுறத்தில் மாநிலங்களின் அதிகாரங்களையும், நிதியாதாரங்களையும் முற்றாகப் பறிப்பதில் ஈடு பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாகவே, மின் விநியோ கம் உள்ளிட்ட மின்துறையின் அனைத்து செயல் பாடுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் மின்சார திருத்தச் சட்டம் 2020 -ஐ கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் குறித்து மாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் நாடாளுமன்றத்திலும் முறையாக விவாதிக்காமல் அவசர அவசரமாக திணித்து வருகின்றனர்.

இதனால் மாநிலங்கள் செயல்படுத்தி வரும் மின்துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத் தில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் பறிபோக வுள்ளது. 

மாநிலங்களின் நிதி நெருக்கடியை பயன் படுத்திக் கொண்டு இந்த சட்டத்தை நிறைவேற்றி னால்தான் மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பை தளர்த்த முடியும் என மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது கொடூ ரத்திலும் கொடூரமாகும்.

2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மின்சார மானி யத்தை ரத்து செய்ய வேண்டும், ஒரு மாவட்டத்தி லாவது இதை செயல்படுத்தி காட்டினால்தான் கடன் வரம்பை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இந்த விசயத்தில் தமிழக அதிமுக அரசு எந்தளவுக்கு உறுதியாக நிற்கப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். ஏனெனில் மாநிலங்க ளின் உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறிக்கும் போதெல்லாம் மனு போட்டு கெஞ்சு வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்ற பாணியிலேயே அதிமுக அரசு செயல்பட்டு வந்துள்ளது.

சட்டமன்றத்தில் உரிய பெரும்பான்மை இல்லாமல் மோடி அரசின் தயவிலேயே எடப்பாடி பழனிசாமி அரசு தன்னுடைய நாட்களை கழித்து வருகிறது. ஆட்சியிலிருப்பதை பயன்படுத்திக்  கொண்டு இயன்றவரை தங்களது சுயலாபத்தை பெருக்கிக் கொள்வதிலேயே குறியாக இருக்கி றார்களே அன்றி, தமிழகத்தின் நலனை பாது காப்பதில் கிஞ்சிற்றும் கவலையற்றவர்களாக மாநில ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.

இலவச மின்சாரத்திற்கும், மாநிலத்தின் உரி மைகளுக்கும் மிகப் பெரிய ஆபத்து எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் பொதுக் கருத்தை உரு வாக்கி மாநில உரிமைகளை பாதுகாக்க அதிமுக அரசு முன்வர வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அரசு என்று வாயாடுவதில் மட்டும் கவனமாக இருந்தால் போதாது.