headlines

img

மம்தாவின் குரல் யாருடையது?

மம்தாவின் குரல் யாருடையது?

மேற்குவங்க மாநிலம் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத மாநிலமாக மாறிக் கொண்டி ருக்கிறது. கடந்தாண்டு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு படுகொலை யானார். ஆனால் ஒருவர் மீது குற்றம் சுமத்தி வழக்கை முடித்தது மேற்குவங்க காவல்துறை. அந்த வழக்கில் நீதி கிடைக்காமலே போய்விட்டது. 

கடந்த ஜூன் மாதம் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள் ளானார். இந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டவ ருக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் மேற்கு வங்க காவல்துறை நடந்து கொள்ளவில்லை

இந்நிலையில் தற்போது துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவர், கடந்த வெள்ளிக் கிழமை இரவு கும்பல் பாலியல் வன்கொடுமை க்கு உள்ளாக்கப்பட்டார். தனது நண்பருடன் உணவகத்துக்குச் சென்று திரும்பும் வழியில் 8.30 மணியளவில் அவரது நண்பரை அடித்து விரட்டி விட்டு ஒரு கும்பல் இந்த கொடுமையை இழைத்தது. பின்னர் அவர் காவல்துறையில் புகார் செய்தார்.

ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, நள்ளி ரவு 12.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்படி வெளியே வந்தார்; இதற்கு யார் பொறுப்பு என்று கேட்கிறார். இதை யடுத்து மாணவியின் தந்தை, முதல்வரும்  பெண்தான்; பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கி றாரா என்று கேள்வி எழுப்பினார். ஆனால் சிபிஐ விசாரணை தேவை என முன்பு கேட்ட அவர் தற்போது மாநில விசாரணையே போதும் என்றும் முதல்வர் எனக்கு அம்மா போன்றவர்; அவர் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அவருக்கு என்ன நிர்ப்பந்த மோ? இந்நிலையில் மாணவியின் நண்பர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது ஒருபுறம் இருக்க, நள்ளிரவில் பெண் கள் வெளியே வரக்கூடாதா? வெளியே வந்தால் ஒரு பெண்ணே முதல்வராக இருக்கும் மாநிலத்தில்  இத்தகைய கொடுமை தான் நடக்குமா? ஏதோ வெளியில் வந்ததால் தான் இப்படி நடந்து விட்டதாக கூறினால், ஆர்.ஜி.கர் மருத்துவ மாணவிக்கு கல்லூரிக்குள்ளே தானே கொடுமை நிகழ்ந்தது. மாநிலத்தின் முதல்வராக கடுமையான நடவ டிக்கை எடுப்பதற்குப் பதில் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசலாமா?

பெண்கள் வெளியில், வேலைக்குப் போகக் கூடாது என்பது மதப் பழமைவாதிகள், மடாதிப திகள் போன்றவர்களின் கருத்தல்லவா? இந்துத் துவாவாதிகளின் ஆணாதிக்கச் சிந்தனையல்ல வா? அவர்களின் குரலை மம்தா எதிரொலிக் கலாமா? ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் நடமாட முடியும் என்றால் அதுதான் உண்மையான சுதந்திரம் என்று காந்திஜி கூறி னார் என்பார்கள். ஆனால் பெண் முதல்வரே இப்படிப் பேசலாமா?