வழுவா நீதிக்காகவே!
தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலத் தலை வர் நயினார் நாகேந்திரன் வெடித்திருக்கிறார்.
நீண்ட காலமாக தீபம் ஏற்றப்படும் இடத்தை விட்டு, நல்லிணக்கச் சூழலைக் கெடுக்கும் விதத்தில் தர்காவுக்கு அருகில், “நடப்பாண்டு முதல் அந்தத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டதும் நீதிமன்ற காவல் பணி யில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை யினரை அழைத்துக் கொண்டு நீங்களே போய் தீபம் ஏற்றுங்கள் என்பதுமா பண்பாட்டு உரிமை? கலவர விரும்பிகள் கையில் தீப்பந்தத்தைக் கொடுப்பதுவா உரிமையை நிலைநாட்டுவது? நீதிபதியாக இல்லாவிட்டால் நானே சென்று தீபம் ஏற்றுவேன் என்பதும் இடிக்கவா சொன் னேன்? தூக்கிலிடவா சொன்னேன்? என்பதெல் லாம் நீதியின்பாற்பட்ட செயலா?
முந்தைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பு களின் நியாயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நான் சொல்வது தான் தீர்ப்பு, அதை உடனே அமல்படுத்த வேண்டும் என்பதும் பிரதி வாதிகளின் மேல்முறையீட்டு உரிமையை மறுப்பதும் நீதிபதியின் நேர்மையான நியாய மான செயல்பாடா? நல்லிணக்கத்தையும் அமை தியையும் ஏற்படுத்துவதையும் பக்தர்களின் உணர் வையும் கோவில் நிர்வாகத்தின் ஆகம முறைப் படியிலான நடவடிக்கைகளையும் சீர்குலைக்க முயல்வதும் நீதிபதிக்கு அழகல்லவே. அத னால் தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்துப் போட்டு மக்களவை சபாநாயகரிடம் கொடுத்தி ருக்கிறார்கள்.
நீதி வழுவா நெறிமுறையில் செயல்பட வேண் டிய நீதிபதி, தனை மறந்து ஒருபால் கோடாது செயல்பட வேண்டும் என்பதற்காகவே; அக நிலை உணர்வுகளிலிருந்து செயல்படாமல் அற நிலையுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த முயற்சி.
ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமை யை முடக்க நினைக்கும் பாசிச திமுக என்றும் நீதிக்கே பூட்டுப் போட நினைக்கிறது இந்த மக்கள் விரோதக் கும்பல் என்றும் கூட நயினார் நாகேந்தி ரன் பொரிந்து தள்ளியிருக்கிறார். வழிபாட்டு உரி மைகளை முடக்குபவர்கள் யார் என்பதும் நீதிக்குப் பூட்டுப் போடுபவர்கள் யார் என்பதும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்
இது அரசியல் பிழைப்புக்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித் துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் செயல் என்றும் அங்கலாய்த்திருக்கிறார். அசைத் துப் பார்ப்பதல்ல மோடி தலைமையிலான பாஜக அரசு நீதித்துறையையும் தனது ஆக்டோ பஸ் பிடிக்குள் வளைத்திருப்பதை நாடே அறியும். அதை தடுத்து நிறுத்துவதே மதச்சார்பற்ற கட்சிக ளின் கடமை. அதையே இப்போது அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்
