headlines

img

மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்

தில்லியின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசி யலில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறிக்கிறது.  இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என பல்வேறு நலத்திட்டங் களை வழங்கிய போதிலும், மதச்சார்பற்ற சக்தி களின் ஒற்றுமையின்மையும், நல்லாட்சியின் பற்றாக்குறையும் ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பின்னரும் பதவி விலக மறுத்தது, அமைச்சரவை கூட்டங் களை ஒத்திவைத்தது போன்ற நிர்வாக செயல்பாடுகளின் குறைபாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இலவச திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு போதுமானதல்ல என்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கைகள், நல்ல நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு ஆகியவை மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன. 

தில்லியில் பாஜகவின் வெற்றி இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தேர்தல் முடிவுகள்  வலியுறுத்துகின்றன. 

பாஜகவை எதிர்கொள்ள உறுதியான மதவெறி எதிர்ப்பு தேவை. கருத்தியல் அடிப்படை யிலான அரசியலும், திறமையான நிர்வாகமும் தேவை. சிறுபான்மையினர், பின்தங்கிய வர்க்கத்தினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

தில்லி தேர்தல் முடிவுகளிலிருந்து எதிர்க் கட்சிகள் உரிய படிப்பினைகளை பெற வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் திட்டங்களுடன், பாஜகவின் மதவெறி அரசி யலுக்கு எதிரான உறுதியான  மதச்சார்பின்மைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையிலும் பாஜக தொடர்ந்து தனது மதவெறி நிகழ்ச்சி நிரலை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களது வியூகங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். வெறும் எதிர்ப்பு அரசியல் மட்டுமே போதாது. மாற்று கொள்கைகள், திட்டங்கள், தெளிவான பார்வை  ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

 இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது, சமூக நல்லிணக்கத்தை வலுப் படுத்துவது, பொருளாதார சமத்துவத்தை உரு வாக்குவது என அனைத்து மதச்சார்பற்ற, ஜன நாயக சக்திகளின் பொதுவான நோக்கங்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். தில்லி தேர்தல் முடிவுகள் காட்டும் எச்சரிக்கை சமிக்ஞைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப தங்களை தயார் படுத்திக் கொள்வதே எதிர்க்கட்சிகளின் முன்னுள்ள சவாலாக உள்ளது. இந்த சவாலை சரியாக எதிர்கொள்வதில்தான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.