headlines

img

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்க ளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மறுத்து வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற் கான நிதியையும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே பெற முடிந்தது. இந்நிலையில் புதனன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் புனே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதோடு ரூ.9,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.

மேலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் நான்கு மாவட்டங்களை உள்ள டக்கிய இரண்டு ரயில்வே திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத்  மாநில ரயில்வே திட்டங்களுக்கு ஒப்பு தல் அளிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைத்து வகையிலும் தமிழ்நாடு, கேரளம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பது அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கே எதிரானது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் ரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு இழைத்து வரும் அநீதியை பட்டியலிட்டுள்ளார். உதாரணமாக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ‘பிங்க் புக்’கில்   தமிழகத்தின் புதிய இருப்புப் பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறி விக்கப்பட்ட தொகையைக் கூட விடுவிக்க மறுத்து தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங் கள் முடக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். 

சு.வெங்கடேசன் எழுப்பியுள்ள கேள்வி களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் அநீதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இயற்கைப் பேரிடர் நிதி ஒதுக்கீடு துவங்கி, இந்தி திணிப்பை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு ஒதுக்க வேண்டிய நிதியைக் கூட ஒன்றிய அரசு மறுப் பது முற்றிலும் அநீதியானது. கீழடி அகழாய்வி லிருந்து ஒன்றிய அரசு விலகிக் கொண்டது மட்டுமின்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்குக் கூட முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 

ஆனால் மறுபுறத்தில் நான் இளம்வயதி லேயே தமிழ்மொழியை படிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி நெக்குருகிப் பேசு கிறார். “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றா கும்” என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளை அவ ருக்கு யாராவது மொழிபெயர்த்துச் சொன்னால் நல்லது.