மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் சுட்டுப்படுகொலை
மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் சோதனை என்ற பெயரில் இரண்டு பாலஸ்தீனர்களை சுட்டுப்படுகொலை செய்துள் ளது. ஆயுதமற்ற அந்த இருவரும் ராணுவத்தினரை கண்டு அமைதியாக சரணடைய நின்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட காணொலி வெளியாகியுள்ளது. அதேபோல இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் மீதான தாக்குதலையும் நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. இத்தகைய தொடர் தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை இஸ்ரேல் அழித்து வருகிறது.
ஹாங்காங் தீ விபத்து : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போ யுள்ளதால் தொடர் தேடுதல் பணி நடந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை யன்று மீட்புப் படையினருடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். சீனா வில் உள்ள பல மின்சார கார், பேட்டரி உற்பத்தி நிறு வனங்கள் நிவாரணத்திற்கு நிதி உதவியளிப்பதுடன் மீட்புப் படை மற்றும் பொதுமக்களின் மின்னணு உப கரணங்களை சார்ஜ் செய்ய உதவி செய்து வருகின்றன.
ஜெர்மனியை தொடர்ந்து ராணுவத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் பிரான்ஸ்
ஜெர்மனியை தொடர்ந்து பிரான்ஸ் அரசும் தனது ராணுவத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்கு 10 மாத தன்னார்வ ராணுவ சேவையை பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இது 2026 இல் துவங்கும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது நேட்டோ படையெடுப்பை மையமாகவும் ஐரோப்பியா நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற பிரச்சாரத்தின் பின்னணியிலும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றன.
வெள்ளம், நிலச்சரிவு : இந்தோனேசியாவில் 90 போ் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 90 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்க ளை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள னர். கடந்த வாரம் பருவமழை வழக்கத்தை விட அதி கமாக பொழிந்தது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் மலைப்பகுதி கிராமங்களை அடித்துச் சென்றது. 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் நிலச்சரிவில் புதையுண்டன என்று அந்நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா- அரபு அமீரகம் வர்த்தக உறவு ஆலோசனை
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளின் பொருட்களை சந்தைப்படுத்துவது, தரவுப் பரிமாற்றம், தங்கம் இறக்குமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருதரப்பு ஆலோசனை குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருநாடுகளுக்கும் இடையே உருவாகும் இவ்வொப்பந்தம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போன்றதே என கூறப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் : ஜெர்மன் ஆய்வு நிறுவனம் தகவல்
பெர்லின்,நவ.28- இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஆய்வு வெளியாகி யுள்ளது. ஜெர்மனியின் ரோஸ்டாக் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவன (MPIDR) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை நமக்கு ஒருபோதும் தெரிய வராது. சராசரியான எண்ணிக்கை எவ்வளவு இருக்கக்கூடும் என் பதை முடிந்தவரை துல்லியமாகக் கணக்கிடவே நாங்கள் முயற்சி செய்கிறோம் என இந்த ஆய்வுத் திட்டத்தின் இணைத் தலைவரான ஐரினா சென் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆராய்ச்சிக் குழுவானது காசாவின் சுகாதார அமைச்சகம், தனிப்பட்ட குடும்பக் கணக் கெடுப்புகள், சமூக ஊடகங்களில் கிடைத்த மரணப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளைச் சேகரித்து, புள்ளிவிவரக் கணிப்புகளை நடத்தி யுள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று காசா மீது இஸ்ரேல் இனப்படுகொலை போரை துவங்கிய பிறகு காசா சுகாதார அமைச்சகம் மட்டுமே பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கையை வெளி யிடும் ஒரே அதிகாரப்பூர்வமான ஆதாரமாகவுள்ளது. தற்போது அந்த சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின் படி பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. இந்நிலை யில் காசா அமைச்சகம் பலி எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூறுவதாக இஸ்ரேல் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும் அமைச்சகம் வெளி யிட்டுள்ள இந்த எண்ணிக்கை குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘தி லான்செட்’ ஆய்விதழின் தகவல் பிரபலமான மருத்துவ இதழான தி லான்செட் போன்ற அமைப்புகளும் இந்த எண்ணிக்கை குறைந்தது 1,00,000-க்கும் அதிகமாக இருக் கக்கூடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளன. சுகாதார வசதிகள் சீர்குலைந்தது, பஞ்சம், நோய் போன்ற மறைமுக மரணங்களையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை 1,49,000 முதல் 5,98,000 வரை இருக்கலாம் என்று தி லான்செட் கூறியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், ‘தி லான்செட்’ வெளியிட்ட அறிக்கையில் காசா மீதான இஸ்ரேலின் போரால் மூன்று மில்லியன் (30 லட்சம்) ஆயுட்கால ஆண்டுகள் இழக்கப்பட்டுள் ளன என்று குறிப்பிட்டுள்ளது. இழந்த ஆயுட்கால ஆண்டுகள் என்பது, முன்கூட்டியே இறக்காமல் இருந்திருந்தால், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் வாழ்ந்திருக்கக்கூடிய மொத்த எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலத்தைக் குறிக்கும்.
