articles

மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் இல்லை என்பது உண்மையல்ல; நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்க செவிலியர்கள் சங்கம் கோரிக்கை!

மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் இல்லை என்பது உண்மையல்ல; நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்க செவிலியர்கள் சங்கம் கோரிக்கை! 

சென்னை, நவ. 28-   தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை களில் காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்த கருத்து உண்மைக்கு மாறானது என்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் (TNEA) தெரிவித்துள் ளது. நிரந்தரப் பணியிடங்களை உருவாக்கி, ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அச்சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆயிரக்கணக்கான செவிலியர் பணியிடங்கள் காலி!  அறிக்கையின்படி, மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நிரப்பப்பட வேண்டிய 1,500 செவிலியர் பணியிடங் களும், சுமார் 1,000 ஒப்பந்தப் பணியிடங்களும் தற்போது காலியாக உள்ளன. இதையும் கடந்து, இந்திய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்களின் (IPHS) பரிந்துரைகளுக்கு ஏற்ப, மருத்துவமனைகளில் உள்ள பய னாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதிய செவிலியர் மற்றும் மருத்துவ ஊழி யர் பணியிடங்கள் அரசால் உருவாக்கப்பட வில்லை என்றும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவச் சிகிச்சை தரத்தில் தொய்வு நோயாளிகளின் எண்ணிக்கையை விட செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்குவதில் தொய்வு ஏற்படுவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.  குறிப்பாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒரு ஷிஃப்டில் மூன்று நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில், மொத்தம் 9 நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும். ஆனால், மூன்று செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு செவிலியர் பணியிடம் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.  செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (1550 படுக்கைகள்), திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை (1700 படுக்கைகள்), மதுரை ராஜாஜி மருத்துவமனை (2780 படுக்கைகள்) போன்ற பெரிய மருத்துவமனைகளில் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.  கோரிக்கை  புதிய அரசு பொறுப்பேற்ற பின், புதிய பணியிடங்கள் உருவாக்காமல், புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவமனைகளை மற்ற மருத்துவமனைகளிலிருந்து ஊழியர்களை மீள் பணி (Redeployment) மூலம் கொண்டு இயக்கி வருவது வருத்த மளிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.  எனவே, அமைச்சர், மருத்துவத்துறை யில் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தரத் தன்மையுடைய மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர் பணி யிடங்களை உருவாக்கவும், மேலும், தொகுப்பூதியம், ஒப்பந்த முறையில் பணி  செய்யும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.