articles

img

அறிவாளி போல பேச முயன்றாலும், அருகதை அற்றவரே ஆளுநர் ரவி! - க.கனகராஜ்

அறிவாளி போல பேச முயன்றாலும், அருகதை அற்றவரே ஆளுநர் ரவி!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பொது வெளியில் பேசும் ஒவ்வொரு பேச்சும் அவரது அரசியல் அறியாமையையும், ஆளுநர் என்கிற பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர் என்பதை யும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது. நாகா லாந்து மக்கள் அவரை வெளியேறச் சொன்ன விதம், தமிழ்நாட்டிற்கு ‘தமிழகம்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற இவரது அராஜகமான பேச்சு, வள்ளலார், வைகுண்ட சுவாமிகள், வள்ளுவர் போன்றோரின் தத்துவங்களில் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பதுபோல பேசியது என அவரது அறியாமை பலமுறை வெளிப்பட்டுள்ளது. இவை அனைத்தும், சனாதன சங்பரிவாரின் இயல்பான குணம் இவரது இரத்தத்தோடு கலந்திருப்பதைக் காட்டுகிறது.

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சியத்தின் மீது அவர் முன்வைத்த விமர்ச னங்கள், அவரது அறியாமையின் உச்சமாகவும், வன்மத்தின் உச்சமாகவும், மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. மார்க்சியத்தை விமர்சிப்ப தோ, எந்த ஒரு மாமனிதனையும் கேள்வி கேட்பதோ தமிழ் மரபு. நக்கீரன் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொன்னதே நமது முற்போக்கு மரபுதான். எனவே, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வராக மார்க்ஸும் இருக்க முடியாது. ஆனால், ஒரு வரை விமர்சிப்பதற்கு முன்னர், அவர்கள் எதைக்  கூறினார்கள், எந்தப் பொருளில் கூறினார்கள் என்பதை உள்வாங்காமல், மேலோட்டமான சில வார்த்தை களை மட்டும் எடுத்துக் கொண்டு அவதூறு பரப்புவது ரவியின் தகுதியின்மையையே காட்டுகிறது. தான் ஏதோ திடுக்கிட வைக்கும் உண்மைகளைச் சொல்ப வர் என்று காட்டிக்கொள்வதற்காக, ஆளுநர் ரவி மீண்டும் ஒருமுறை தன் அறியாமையை வெளிப் படுத்தியுள்ளார்.சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சியத்தின் மீது அவர் முன்வைத்த விமர்ச னங்கள், அவரது அறியாமையின் உச்சமாகவும், வன்மத்தின் உச்சமாகவும், மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. மார்க்சியத்தை விமர்சிப்ப தோ, எந்த ஒரு மாமனிதனையும் கேள்வி கேட்பதோ தமிழ் மரபு. நக்கீரன் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொன்னதே நமது முற்போக்கு மரபுதான். எனவே, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வராக மார்க்ஸும் இருக்க முடியாது. ஆனால், ஒரு வரை விமர்சிப்பதற்கு முன்னர், அவர்கள் எதைக்  கூறினார்கள், எந்தப் பொருளில் கூறினார்கள் என்பதை உள்வாங்காமல், மேலோட்டமான சில வார்த்தை களை மட்டும் எடுத்துக் கொண்டு அவதூறு பரப்புவது ரவியின் தகுதியின்மையையே காட்டுகிறது. தான் ஏதோ திடுக்கிட வைக்கும் உண்மைகளைச் சொல்ப வர் என்று காட்டிக்கொள்வதற்காக, ஆளுநர் ரவி மீண்டும் ஒருமுறை தன் அறியாமையை வெளிப் படுத்தியுள்ளார்.

மார்க்சும் இந்தியாவும்:  ஆளுநரின் வரலாற்றுப் புரட்டு

காரல் மார்க்ஸ் ஆங்கிலேயர்களைப் பாராட்டிய தாக ஆளுநர் ரவி கூறுகிறார். மார்க்ஸ் 1853-இல் ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ பத்திரிகையில் இந்தியா குறித்து எழுதிய கட்டுரைகளை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

l பிற்போக்குத்தனத்தை சாடிய மார்க்ஸ்: மார்க்ஸ், “மனிதன் குரங்கின் முன்னாலும், நாட்டின் (கோவி லின்) முன்னாலும் மண்டியிட்டுக் கிடப்பது பிற் போக்குத்தனம்” என்று சாடினார். இப்போதும் நாம் அதையேதான் சொல்கிறோம். ஆர்.என்.ரவி ஆடு, மாடு, நாய், பூனை எதன் முன்னாலும் மண்டி யிட்டுக் கிடக்கலாம். ஆனால், மனிதன் அப்படி கிடப்பது சரியல்ல என்று மார்க்ஸ் சொன்னது முற்றிலும் சரி. ஓரறிவு முதல் ஆறறிவு வரை அறிவுக்கு மதிப்பளிக்காத பிற்போக்குத்தனத்தைத்தான் மார்க்ஸ் கேள்விக்குள்ளாக்கினார்.

l ஏகாதிபத்தியமும் முற்போக்கான அம்சமும்: மார்க்சும், ஏங்கல்சும் 1848-இல் வெளியிட்ட ‘கம்யூ னிஸ்ட் அறிக்கை’யில் வரலாற்று ரீதியாக முதலா ளித்துவம் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது என்று குறிப்பிட்டனர். இதன் பொருள் முதலா ளித்துவம் நல்லது என்பதல்ல. அது, அதற்கு முன் இருந்த நிலப்பிரபுத்துவ உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பதாகும்.

அதேபோலத்தான், இந்தியாவில் இறுக்கமடைந்தி ருந்த சாதிய அடிப்படையிலான கிராமியப் பொரு ளாதாரக் கட்டமைப்பை, ஆங்கிலேயர்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக உடைத்தெறிந்ததை மார்க்ஸ்  சுட்டிக்காட்டினார். இங்கிருந்த கிராமங்கள் சுய தேவையை பூர்த்தி செய்தன; ஆனால் பொருட்கள் சந்தைக்குப் போகாமல், தேக்கமடைந்த நிலையில் இருந்தன. இந்த இறுகிப்போன சமூகப் பொருளா தாரக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் தங்கள் நல னுக்காக உடைத்தெறிந்தது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழியமைத்தது. அதைத்தான் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதே கட்டுரைகளில் மார்க்ஸ் மிகத் தெளி வாகச் சொல்கிறார்: “ஆங்கிலேயர்கள் இங்கிருந்த சிறு, குறு மற்றும் கைத்தறித் தொழில்களை அழித்து, மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டுபோய், தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கி, இந்தி யாவைச் சந்தையாகப் பயன்படுத்தினார்கள். இந்தி யாவை ஒட்டச் சுரண்டினார்கள். மக்கள் மீது கந்து வட்டிக்காரன் போல வரிகளை விதித்து வாட்டி வதைத்தார்கள்.” 

இறுதியில், இந்தியா தன்னை சுதந்திரம் பெற்ற நாடாக அறிவித்துக் கொள்வதுதான் அடுத்த கட்டத்தி ற்குப் போக முடியும் என்றும் மார்க்ஸ் வலியுறுத்தி னார்.

அதாவது, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தேக்க மடைந்த பொருளாதாரக் கட்டமைப்பை உடைத்து உற்பத்தியைச் சந்தை நோக்கி உந்தினார்கள் என்று மார்க்ஸ் சொன்னதைத்தான், அவர் ஆங்கிலேயர்க ளைப் பாராட்டி விட்டதாக ரவி குமுறுகிறார்; ஆனால் அவர்களது ஒட்டுமொத்த ஏகாதிபத்தியச் சுரண்ட லையும் வன்மையாகச் சாடி, விடுதலைக்கான தேவையை மார்க்ஸ் வலியுறுத்தினார் என்பதை வசதி யாக மறந்துவிட்டார். இதை உள்வாங்காமல் மேலோட்டமாகப் பேசுவது ஆளுநரின் வரலாற்றுப் புரட்டையும், அரசியல் அறியாமையையும் காட்டு கிறது.

விடுதலைப் போராட்டமும்  ஆளுநரின் தத்துவமும்

ஆளுநர் ரவி, நாம் உடல் ரீதியாக விடுதலை பெற்றாலும், சிந்தனையில் இன்னமும் அடிமைச் சங்கிலி இருக்கிறது என்று பேசியிருக்கிறார். விடு தலைப் போராட்டத்தில் ஒரு துளியளவும் பங்கெடுக் காத, மாறாக ஆங்கிலேயரிடம் சொகுசான வாழ்வுக்காக ஓய்வூதியம் பெற்ற பாரம்பரியம் கொண்டவர்கள் இவரது தத்துவத்தில் ஊறியவர்கள்.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், சிறைக்குள் கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்த சுப்பிரமணிய சிவா போன்றோர் தங்கள் உடலை யும் உயிரையும் அர்ப்பணித்தபோது, ரவி ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் தத்துவம் எங்கு இருந்தது? சிவாவின் வாய்க்குள் சிறுநீரை ஊற்றி ஆங்கிலேயர்கள் வக்கிரம் தீர்த்தபோது, இந்த அடிமைச்சேசவகர்கள் எங்கு இருந்தார்கள்? விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள், இன்று மற்ற வர்களைப் பார்த்து, “உங்கள் மூளையில் விலங்கு உள்ளது” என்று சொல்வது அறமற்ற செயல்.

அறிவு உலகளாவியது. “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதி பாடியது, அறிவுக்கும், தத்து வத்திற்கும் அந்நியர், இந்தியர் என்ற வேறுபாடு இல்லை என்பதைத்தான். ஓட்டுக்காக 1980-இல் ‘காந்திய சோசலிசம்’ என்று கொள்கை அறிவித்த ஆர்எஸ்எஸ் பேர் வழிகள், இன்று சோசலிசத்தை ‘அந்நி யத் தத்துவம்’ என்று பேசுகிறார்கள். விடுதலையை உச்சரிப்பதற்கான தகுதி கூட இல்லாத கூட்டம் ஆளுநர் ரவியின் பின்னால் உள்ளது. எனவே, மார்க்ஸைப் பற்றி பேச அவருக்கு எந்த அருகதை யும் இல்லை.

நாகரிகத்தை அழித்ததா மார்க்சியம்?

ஆளுநர் ரவி, “மார்க்சியர்கள் நம்முடைய நாகரி கத்தை அழித்துவிட்டார்கள்” என்று கூறுகிறார்.

உங்கள் நாகரிகம் எது?

lகுரங்கு முன்னாலும், மாட்டின் முன்னாலும் மனிதன் மண்டியிட்டுக் கிடப்பது உங்கள் நாகரிகம் என்றால், அது மனித அறிவுக்கு விரோதமானது.

l மனுதர்மத்தின்படி பெண்களை, நம்பக்கூடாதவள், சபல புத்திக்காரி என்று முத்திரை குத்தி, அவர்க ளைத் தகப்பன் அல்லது கணவனின் நிரந்தரக் கண்காணிப்பிலேயே வைத்திருக்கச் சொல்வது தான், நாகரிகமா?

lகுழந்தைத் திருமணம், விதவை மறுமணத்தை மறுத்து, இளம் பெண்களை வெள்ளைச் சேலை கட்டிப் புழுவினும் கீழாக நடத்துவது தான், நாகரிகமா?

lகணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுவது, மறுக்கும் பெண்ணை உயிரோடு நெருப்பில் எரிப்பது தான் நாகரிகமா? l கோல்வால்கர் ‘பகவான் மனு’ என்று போற்றும் மனுஸ்மிருதி, மனிதர்களை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரனுக்கு உழைப்பு மட்டுமே விதிக் கப்பட்டது என்று சொன்னது தான் நாகரிகமா?

இந்த நாகரிகம் என்பது சுரண்டலையும், ஒடுக்கு முறையையும், அடிமைத்தனத்தையும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்துகிறது. இது மனித நாக ரிகத்தை மறுக்கிற அறமற்ற செயலில் ஈடுபடுகிறது. இதைத் துடைத்தெறிவது மனிதகுலத்தின் அடிப்ப டைப் பணி.

சுரண்டலை ஒழித்து, மனித சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து போராடுவார்கள். ஆளுநர் ரவி, மக்களின் வரிப்பணத்தைப் பயன் படுத்தி, ஆளுநர் மாளிகைக்குள் இருந்து கொண்டு, மனிதகுலத்திற்கு விரோதமான, மோசமான பிற்போக்குத்தனமான கருத்துக்களைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தகாத, அடாத, அறமற்ற செயல்.