விண்வெளியில் தனியார் : யாருக்கான வளர்ச்சி?
பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்கைரூட்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘இன்ஃபினிட்டி வளா கத்தை’ ஹைதராபாத் அருகே திறந்து வைத்தி ருக்கிறார். இந்திய விண்வெளித் துறையில் தனி யார்மயம் மற்றும் பெருநிறுவனங்களின் நுழைவு எந்த வேகத்தில் நடந்தேறுகிறது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளமுடியும். இது ‘புதிய இந்தியாவின் சிந்தனை’ என்று கொண்டா டப்படுகிறது. இது யாருக்கு லாபம்?
பொதுத்துறை நிறுவனமான இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, குறைந்த வளங்களைக் கொண்டு, உலகத்திற் கே வழிகாட்டும் வகையில் விண்வெளிச் சாத னைகளை அர்ப்பணிப்புடன் நிகழ்த்தி வரு கிறது. ஏழை விவசாயிகளின் பிள்ளைகளும், சாதாரண பின்னணியில் இருந்து வந்த திற மையான விஞ்ஞானிகளும் தங்கள் வியர்வை யால் செதுக்கிய வரலாற்றுப் பயணம் அது. ஆனால், இன்று, அந்தப் பெருமைமிகு பொது வான சாதனைகள் மெல்ல மெல்ல தனியாரின் லாப வேட்டைக்கான பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன.
இஸ்ரோ கடந்த 10 ஆண்டுகளில் பல நாடு களின் செயற்கைக் கோள்களை வணிக ரீதியில் ஏவி வருவாய் ஈட்டி வருகிறது. இந்த வருவாயை தனியாருக்கு மடைமாற்றம் செய்யும் வேலையை ஒன்றிய அரசு தீவிரமாகத் தொடங்கி யுள்ளது. விண்வெளி, விவசாயம், வானிலை போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குப் பயன் படும் கருவிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒட்டுமொத்த தேசத்தின் முதன்மை முக்கி யத்துவம் வாய்ந்த வளங்களையும் சில கார்ப்ப ரேட் கைகளுக்கு மாற்றுவதற்குச் சமம்.
வெறும் ‘இளம் தொழில்முனைவோர்’ என்று இவர்களைப் புகழ்ந்து, அரசின் ஆதரவை குவிப்பது, சமூகப் பொறுப்பு மற்றும் மக்கள் நலனை நோக்கிய அறிவியல் ஆராய்ச்சியில் இருந்து பின்வாங்குவதையே காட்டுகிறது. மேலும், இந்தத் தனியார் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வ தால், நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள ஏழை விவசாயிகள், மீனவர்களுக்கு விண் வெளிப் பயன்பாடுகள் மலிவான விலையில் சென்றடைவது கேள்விக் குறியாகிறது.
‘ஸ்டார்ட்-அப் புரட்சி’ என்று பிரதமர் குறிப்பி டுவது, உழைக்கும் வர்க்கத்திற்கோ அல்லது ஏழை மக்களுக்கோ நீடித்த வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதில்லை. மாறாக, பெரும் மூல தனம் உள்ள ஒரு சிலருக்கான கதவுகளை மேலும் அகலத்திறக்கிறது. இஸ்ரோ போன்ற பொது நிறுவனங்களை பலப்படுத்தி, விண்வெ ளித் தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் கடமை யாகும். ஆனால், நடப்பதோ அதற்கு நேர்மாறா னது. லாப நோக்கமற்ற, மக்களின் நலனை மையப்படுத்திய பொது நிறுவனங்களால் மட்டுமே நாட்டின் உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகும்.
