இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இந்தோனேசியா சுமத்ரா தீவில் உள்ளூர் நேரப் படி வியாழனன்று காலை 10.56 மணியள வில் 25 கி.மீ ஆழத்தில் 6.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 7 நொடிகள் வரை நிலநடுக்கம் இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனினும் இலங்கை கட லோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய பெருங்கடல் சுனாமி எச்ச ரிக்கை மையம் கூறியுள்ளது. மலாக்கா ஜலசந்தி யில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்துள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகேவுள்ள ஃபேராகட் வெஸ்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரைத் தாக்கி அவரது துப்பாக்கியை பிடுங்கி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குத லில் இரு காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை புறக்கணிக்கும் டிரம்ப்
2026 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் தென்ஆப்பிரிக்காவை புறக்கணிக்க உள்ளதாக டிரம்ப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு தென் ஆப்பிரிக்காவை அழைக்கப்போவதில்லை. அந்த நாட்டிற்கான அனைத்து அமெரிக்க உதவிகளும் நிறுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்த செயலை கண்டித்ததுடன் அவர் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தவறான தகவல்கள் தெரிவிப்பது, வருந்தத்தக்கது என்று தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா கூறியுள்ளார் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை இயற்கை சீற்றம்: இலங்கையில் மோசமடையும் நிலைமை
இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையையொட்டி காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலம் வலுவ டைந்துள்ள நிலையில் 200 மி.மீ-க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநா யக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நைஜீரியாவில் அதிகரிக்கும் ஆள்கடத்தல்: அவசர நிலை அறிவித்த ஜனாதிபதி
நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்கு தல்கள், ஆள்கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனை எதிர்கொள்ளும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு நாடு தழுவிய அவசர நிலை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு கூடுதலாக 20,000 காவல்துறையினர் நிய மிக்கப்படுவார்கள். குறிப்பாகப் பாதுகாப்புச் சவால் களை எதிர்கொள்ளும் பகுதிகளில், அதிக வீரர்களைப் பணியமர்த்துவதன் மூலம் சூழலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
