இது அடிமைச் சாசனம்!
1947-இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, 2026-இல் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடிபணியும் நிலைக்குச் சென்றுள்ளது. அமெரிக்கா இந்திய வேளாண் பொ ருட்கள் மீது 18 சதவிகிதம் வரி விதிக்கிறது; ஆனால் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு 0 சதவிகிதம் வரி! டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு முன்பு இந்தியப் பொருட்களுக்கு 2–3 சதவிகிதமாக இருந்த வரி, இப்போது 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 600 சதவிகித அதிகரிப்பு. இதுவா வெற்றி? முன்பு 125 சதவிகிதம் வரி விதித்து பாதுகாக்கப்பட்ட இந்தியச் சந்தை, இன்று அமெரிக்க ஆக்கிர மிப்புக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 60 கோடி மக்கள் விவசா யத்தைச் சார்ந்துள்ளனர். அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.26 லட்சம் கோடி) மானியம் வழங்குகிறது. மானியம் பெற்ற அமெரிக்க சோயா பீன்ஸ், பருப்பு மற்றும் மக்காச்சோளம் 0 சதவீத வரி யில் இந்தியாவுக்குள் குவிக்கப்படும். இதனால் இந்திய விவசாயிகளின் வருமானம் அதல பாதாளத்திற்குச் செல்லும். அமைச்சர் பியூஷ் கோயல் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருப்பதா கக் கூறுகிறார். ஆனால் அமெரிக்க வேளாண் செயலர் புரூக் ரோலின்ஸ், “இந்தியச் சந்தை அமெரிக்க விவசாயிகளுக்குத் திறக்கப்பட்டுள் ளது” என்று கொண்டாடுகிறார்.இந்தியாவை ஆள்வது யார்?
இந்தியாவில் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 20 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலை தருகின்றன. இந்தி யாவின் ஜிடிபியில் 30 சதவிகிதமும், ஏற்றுமதி யில் 45 சதவிகிதமும் இவை பங்களிக்கின்றன. இந்த தருணத்தில், அமெரிக்க நவீன தொழில் நுட்பப் பொருட்கள் 0 சதவீத வரியில் வரும்போது, சிறுதொழில்கள் மூடப்படும்; வேலையின்மை பெரு கும். இதனை எப்படி அனுமதிக்க முடியும்?
இந்தியாவின் பெருமை அணிசேரா கொள்கை; அது யாருக்கும் அடிபணிவது அல்ல. ஆனால் அமெரிக்கா, ஈரானிடம், ரஷ்யாவிடம் மலிவான விலையில் எண்ணெய் வாங்குவதை நிறுத்து என்றவுடன், மோடி அரசு படுத்தே விடுகிறது. தில்லியின் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டன் தீர்மானிப்பதா?
நாட்டின் மிக முக்கிய ஒப்பந்தம் நாடாளு மன்றத்தில் முதலில் அறிவிக்கப்படவில்லை. டிரம்ப்பின் பதிவு மூலமாகத்தான் இந்தியர்கள் அறிந்தனர். இது அவமானம் அல்லவா? நாடா ளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் வெளியேற்றப்படுகின்றனர். அதானி வழக்கு, எப்ஸ்டீன் ஆவணங்கள் — இவை அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்தே கம் வலுப்பெறுகிறது.
‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்மநிர்பார் பாரத்’ — வெறும் கோஷங்களா? இந்த பட்ஜெட்டில் மின் னணு, மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு — இது அமெரிக்காவின் கட்டளையா? சுயசார்பு என்பது இந்தியாவின் சுயமரியாதை. இன்று மோடி அதை அடகு வைத்து, இந்தியாவை அமெரிக்காவின் வணிகக் காலனியாக மாற்றியி ருக்கிறார். இந்த ஒப்பந்தம் வெறும் வர்த்தக உடன்பாடல்ல — அடிமைச் சாசனம் ஆகும்.
