தொழிலாளர்களின் உயிர்நாடியை நெரிக்கும் ஒன்றிய அரசு
வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச ஊதி யத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உள்ளது. சந்தைப் படுத்தக்கூடிய தொழிலாளர் வகைகளில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் எந்த வொரு தனிப்பட்ட வேலைக்கும் நிலையான ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படவில்லை. குறைந்த பட்ச ஊதிய சட்டம் குறைந்தபட்ச ஊதி யத்தை, கூடுதல் நேரம், வேலை, நேர வேலை என, உழைப்பின் வகையைப் பொறுத்து வகைப் படுத்துகிறது. கூடுதலாக, வாழ்க்கைச் செலவு மற்றும் பிற பொருளாதார நிலைமைகள் அடிப்ப டையில், இந்தச் சம்பளங்கள் வழக்கமான அடிப்படையில் புதுப்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் கடந்த எட்டு ஆண்டுகளாக திருத்தப்படவில்லை. 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்படாமல் இருப்பது, நமது நாட்டின் கோடிக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதலாகும். பொ ருளாதாரம் வளர்ச்சி அடைவதாகப் பேசும் மோடி அரசு, அந்த வளர்ச்சியின் பலன்கள் தொழிலாளர்களை எட்டக்கூடாது என்று திட்ட மிட்டுச் செயல்படுகிறது.
சட்டம் இருந்தும் அதை செயல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2019 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ஊதியக் குறியீடு சட்டம் இன்னும் அம லுக்கு வரவில்லை என்பது தற்செயலானது அல்ல. மேலும் தினக்கூலியில் மாநிலங்களுக் கிடையிலான அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. தில்லியில் திறன் குறைந்த தொ ழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.710 கிடைக்கும் போது, பீகாரில் அதே தொழிலாளருக்கு வெறும் ரூ.428 மட்டுமே கிடைக்கிறது என்பது வர்க்கச் சுரண்டலின் கொடூரமான முகமாகும். இந்த ஏற்றத் தாழ்வு மாநிலங்களுக்கிடையில் தொழிலாளர்க ளின் இடம்பெயர்வை கட்டாயப்படுத்துகிறது.
பணவீக்கம் உயர்ந்துள்ள போதிலும் அதை சமாளிக்க ஊதியம் உயர்த்தப்படவில்லை. இத னால் அமைப்புசாரா தொழிலாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்ந்து உயர்ந்து கொண்டி ருக்கும் காலகட்டத்தில், ஊதியம் திருத்தப்படா மல் இருப்பது தொழிலாளர்களின் வாங்கும் திறனை மட்டுப்படுத்துகிறது. இதன் பொருள் உண்மையான ஊதியம் ஆண்டுதோறும் சரிந்து கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் ஏழ்மையில் உழன்று வருகிறார்கள்.
பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்று பெருமை பேசும் மோடி அரசு, அந்த வளர்ச்சியின் பலன்கள் பெருமுதலாளிகள் மற்றும் பெருநிறு வனங்களுக்கு மட்டுமே செல்வதை உறுதி செய் கிறது. தோட்டத் தொழிலாளர்கள், சேவைத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கா னோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப் படுகின்றனர். குறைந்தபட்ச ஊதியம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை பறிப்பதை அனுமதிக்கலாகாது.