headlines

img

அரசமைப்பே நகைக்கும்!

அரசமைப்பே நகைக்கும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்புச் செய்துள் ளார். அதோடல்லாமல் அதற்கு விளக்கம் என்ற பெயரில் மூன்று பக்க அறிக்கையையும் வெளி யிட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சித் தலைவர் போல பல்வேறு விமர்சனங்களைச் செய்துள் ளார். அத்துடன் அவரது அறிக்கையில் அரசிய லமைப்பின் எழுத்து, ஆவிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். இது கசாப்புக் கடைக் காரர் காருண்யம் பற்றிப் பேசுவது போன்றதா கும். உண்மையில் அவர்தான் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். அரசமைப்புச் சட்டம் பேச முடிந்தால், ஆளுநர் அறிக்கையைக் கண்டே எள்ளி நகையாடும்.

உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கென்று தனி அதிகாரம் கிடையாது என்று தெளிவுபடுத்தியும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின், அமைச்சரவையின் முடிவுப்படி செயல்பட வேண்டியவர் என்று அறிவுறுத்திய பிறகும் கூட இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொள்வது அரசமைப்புச் சட்ட மீறலாகும். இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

ஆர்.என்.ரவி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் பாஜக காரர்கள் போலவே போட்டி அரசாங்கம் நடத்த முயலுகிறார்கள். மாநில அரசுகளின் செயல் பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். மாநில நிர்வாகத்தை முடக்கிட யத்தனிக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையி லான இடது ஜனநாயக முன்னணி  ஆளும் கேரள மாநிலத்திலும் அங்குள்ள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரை யில் 12, 15, 16 ஆகிய பத்திகளில் மாற்றங்கள் செய்து வாசித்திருக்கிறார். அதனால் மாநில முதல்வர் பினராயி விஜயன், இதைச் சுட்டிக் காட்டி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை அறிவிப்பான உரையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாய கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநரால் தவிர்க்கப்பட்ட பகுதிகள் கேர ளாவில் பொருளாதார நெருக்கடியை உரு வாக்குவதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கை களையும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்த தையும் குறிக்கின்றன.

இதைப் போலவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் வாசிக்காமல் சென்ற உரையை, சபாநாயகரால் தமிழில் வாசிக்கப் பட்ட உரையை, அவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அத் துடன் இனி வரும் காலங்களில் சட்டமன்றத் தில் ஆளுநர் உரை நிகழ்த்தும் நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துக் களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் துணை யோடு திமுக முன்னெடுக்கும் என்று கூறி யுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த முயற்சி வெற்றி பெறட்டும். அதற்கு பிற மாநிலங்களும் துணை புரியட்டும்.