அசலும் - நகலும்
வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும்; வள்ளலார் பெயரில் மூலி கைத் தோட்டம் அமைக்கப்படும்; வள்ளலாரு டைய பிறந்தநாள் மூன்று நாட்கள் விழாக்க ளாக நடத்தப்படும் என்பன உள்ளிட்ட ஏழு அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை யின் சார்பில் நடைபெற்ற அனைத்துலக வள்ள லார் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
‘புரட்சித்துறவி’ என்று அழைக்கப்படும் இராமலிங்க வள்ளலார் தமிழக ஆன்மீக மரபில் உதித்த தனித்துவமான சிந்தனையாளர் ஆவார். அவர் வைதீக மரபுக்கு எதிரானவர். “வேதநெறி ஆகமத்தில் நெறிபவு ராணங்கள், விளம்பு நெறி இதிகாசம், விதித்தநெறி முழுவ தும் ஓதுகின்ற சூதனைத்தும், உளவனைத்தும் காட்டி, உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தி னையே” என்பது வள்ளலார் பாட்டு. வேத ஆக மங்கள் எல்லாம் வீண்வாதம் என்று சாடிய வள்ளலார் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும் என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்.
இராமானுஜர், வள்ளலார், வைகுண்டசாமி கள், நாராயணகுரு, அய்யன்காளி, கபீர்தாசர் போன்றவர்கள் ஆன்மீகவாதிகளாக இருந்தபோ தும், சாதி, மத பேதங்களையும், பெண்ணடிமைச் சிந்தனைகளையும் வெறுத்து ஒதுக்கியவர்கள். இந்த சமூகச் சீர்திருத்த மரபை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசிய மாகிறது.
அந்த வகையில் வள்ளலாருக்கு செய்யும் சிறப்பு என்பது அவர் முன்னெடுத்த வைதீக எதிர்ப்பை முன்னெடுப்பதே ஆகும். தாய்மொழி யாம் தமிழ் மொழியைப் போற்றிக் கொண்டாடிய வர் வள்ளலார். இவரது விழா ஒருபுறத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, சிவராத்தி ரியை அபகரிக்கும் நோக்கில் நில அபகரிப்பு, வன அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் ஈஷா யோகா மையத்தில் வித்தியா சமான விழா நடத்துகிறார்.
ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்வுக்கு ஒன்றிய அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒவ்வோராண்டும் வருவதன் மூலம் அவரை பிரபலமாக்குகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து ஊடக வெளிச்சத்தில் மிதக்கி றார் ஜக்கி வாசுதேவ்.
சிவராத்திரி என்பது தமிழக மக்களால் காலம் காலமாக குலதெய்வ வழிபாடாகவே கடை பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிவாலயங்க ளிலும் சிவராத்திரி விழா வழக்கம் போல நடை பெறுகிறது. ஆனால் ஜக்கி நடத்துவது பக்திக்கு சம்பந்தமில்லாத ஆடம்பர ஆர்ப்பாட்ட விழா வாக மாற்றப்பட்டுள்ளது. மக்களிடம் உள்ள இயல்பான பக்தி உணர்வை இத்தகைய போலி ஆசாமிகள் மடைமாற்றம் செய்து அதிகாரத் தரகு மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டு ஆன்மீகத்திற்கு வள்ளலார் வழியேயன்றி, ஈஷா போன்ற அரை குறை ஆசாமிகள் அல்ல.
