headlines

img

இன்னுமொரு மோசடி

 இன்னுமொரு மோசடி

மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு தேவை யற்றது என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது, நுழைவுத் தேர்வு இருந்தால்தான் தகுதி, திறமை பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய ஆட்சியா ளர்கள் அளந்துவிட்டார்கள். ஆனால் நீட்தேர் வுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்பவர்கள் மட்டுமே தேர்விலே வெற்றி பெறமுடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் வினாத்தாள்கள் வெளியாவது உட்பட பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

இப்போது நீட் தேர்வு தொடர்பாக இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முது நிலை மருத்துவப் படிப்பில் சேர்பவர்களுக்கும்  நீட்தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமின்றி, மைனஸ் மதிப்பெண் பெற்றவர்க ளும் கூட சேர்க்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூடப் பெறாதவர் கள் எப்படி தகுதியான மருத்துவர்களாக உரு வாக முடியும் என்ற கேள்விக்கு நீட் என்ற நீட்டோ லையை எடுத்து வாசித்தவர்கள் பதில் சொல்ல வில்லை.

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப் பட்டவர்க்கான இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு மறுத்தது. தமிழக அரசு பெரும் சட்டப் போ ராட்டத்திற்கு பிறகே இந்த இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிந்தது. அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் மற்றும் பல்நோக்கு உயர்நிலை மருத்துவப் படிப்பு களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கும் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணி யாற்றுவதற்கான வாய்ப்பாக மட்டுமே பல் நோக்கு உயர்நிலை மருத்துவப் படிப்புகளை ஒன்றிய அரசு மாற்ற முயல்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் உயர்தரமான சிகிச்சை அளிப்பதைத் தடுத்து தனியார் மருத்துவமனை களை நோக்கி மக்களைத் தள்ளிவிடும் சதியில் ஒன்றிய ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். 

இதையெல்லாம் மறைக்க நீட் தேர்வை ஒரு கவசமாக பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு. இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர்வதற்கு ஒதுக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டிலும் பெரும் மோசடி நடந்து வருவது அம்பலமாகி உள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டு வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது.

பொருளாதாரரீதியாக பின்தங்கியோ ருக்கான ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாத வர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டை தவறாகப் பயன் படுத்தி முதுநிலை மருத்துவத்தில் சேர்ந்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியை ஒன்றிய அரசு நினைத்தால் தடுக்க முடியும். ஆனால் அவர்களே அதற்கான வழியை உருவாக்கித் தருவது தான் கொடுமை.