மலையைக் கெல்லி எலியை...
வெறுப்பை விதைப்பதையே வேலையாகச் செய்து வருகிறார்கள் பிரதமர் மோடி, அமைச் சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட் ட்டோர். பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெறு வதற்காகவே தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்திட முனைந்தது. உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போதும் பிடிவாதமாக அதைச் செய்து முடித்தது. அத னால் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
ஏற்கெனவே தேர்தல் நடைபெற்ற ஹரியானா மாநிலத்தில் நடந்த வாக்குத் திருட்டை தக்க பல ஆதாரங்களுடன் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினார். நேரடியாக இதற்கு பதிலளிக்காமல் ஆணையத்திடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் அமைச்சர் அமித் ஷா.
வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல் காரர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டு வருவதால், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை ராகுல்காந்தி சுமத்துகிறார் என்றும் வாக்கு அதிகார யாத்திரையை அவர் பீகார் முதல் இத்தாலி வரை நடத்தட்டும் என்றும் அமித் ஷா வெறுப்பைக் கக்குகிறார். அதுமட்டுமின்றி சட்டவிரோத குடியேறிகள் தான் எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கி என்றும் அவர்கள் பெற்ற வாக்குரிமை பறிபோகக் கூடாது என்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்றும் பழி சுமத்துகிறார்.
சட்டவிரோதக் குடியேறிகள், ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒன்றிய உள்துறை அமைச்சகம் தானே! அதை செய்ய வேண்டியது அமித் ஷா தானே! 11 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழிபோட்டு திசை திருப்புவது அவரது கையாலாகாத்தனம் அன்றி வேறென்ன?
உள்துறை அமைச்சகம் செய்ய வேண்டிய வேலையை இவர்களது தேர்தல் பிரிவு போலச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்வதைத் தானே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இவரது கூற்றுப்படியே பீகாரில் ஊடுருவல்காரர்களை நீக்கியிருப்பது வெறும் 0.012% தான் எனில் இது கேலிக்கூத்து இல்லையா? மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது என்பது இதுதானோ! ஆனால் வாக்குரிமை நீக்கப்பட்டது பீகாரில் 65 லட்சம் அல்லவா? இது தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டது தானே!
ஆனால் இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அளிக்கும் வாக்குகள் இத்தாலி வரை அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வெறுப்பை உமிழ்கிறார். சோனியா பிறந்தது இத்தாலி என்று வெறுக்கும் இவர்கள், ஆர்எஸ்எஸ்-சின் ஆதர்சமான முசோலினி பிறந்தது அந்த நாட்டில் தான் என்பதையும் அவரது பாசிசக் கொள்கை தான் இவர்களுடையது என்பதையும் மறைக்கப் பார்க்கிறார்கள். அதனால் தான் வெறுப்பையும் விஷத்தையும் விதைக்கிறார்கள்.
