யாருக்கான நீதி என்பதும் முக்கியம்
கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத் தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசார ணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை யில் இந்த விசாரணையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற வில்லை. தமிழக காவல்துறை விசாரணை குறித்தும் எந்தக் கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து “நீதி வெல்லும்” என்று மட்டும் குறிப்பிட் டிருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களு க்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்குமா அல்லது கொடூர சம்பவத்தை மூடி மறைத்து திசை திருப்ப முயல்பவர்களுக்கு நீதி கிடைக் குமா என்ற கேள்வி எழுகிறது.
இதுஒருபுறமிருக்க பாஜக, அதிமுக கட்சி யினர் மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை வேகவேகமாக வரவேற்பதன் மர்மம் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. கரூருக்கு விஜயம் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவெக-வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா ஆகியோர் முன்வைத்த கோரிக்கை நிறைவேறி யிருப்பதாக அவர்கள் கருதக்கூடும்.
இதில் விசித்திரம் என்னவென்றால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக மத்திய புல னாய்வுத்துறை விசாரணை கோரப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் குடும்பத்தினர் தங்களது பெய ரில் போலியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தவெக தரப்பில் கூட தாங்கள் மத்திய புலனாய் வுத்துறையின் விசாரணையை கோரவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடை பெற வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த விசா ரணை எந்தவிதமான குறுக்கீடு மற்றும் அழுத் தத்திற்கு உள்ளாகாமல் நடைபெறுவது அவசி யம். ஏனென்றால் இந்த விசயத்தில் குட்டை யைக் குழப்பி ஆதாயம் பெற முயலும் பாஜக வினர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வேகவேகமாக வரவேற்கின்றனர்.
பல்வேறு வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை ஒன்றிய ஆட்சி யாளர்களின் அழுத்தத்திற்கு ஆளானது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு பாரபட்சமின்றி நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். விசாரணை துவங்கும் முன்பே பாஜகவைச் சேர்ந்த சிலர் தீர்ப்பு வாசிப்பது விபரீதமாக உள்ளது. தங்களது பொறுப் பைத் துறந்து ஓடியவர்களுக்கும், குறுக்கே புகுந்து ஆதாயம் தேட முயல்பவர்களுக்கும் துணை நிற்பதாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணை அமைந்துவிடக்கூடாது என்பதே நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என விரும்புவோரின் விருப்பமாகும்.