சாலைகளின் மேம்பாட்டிற்காக நெடுஞ் சாலைகளில் வரி வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் இன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் அடித்துப் பறிக்கும் அடாவடி சாவடிக ளாக மாறியிருக்கிறது. மக்களுக்கு அவசியமான சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டி யது அரசின் கடமை. ஆனால் இன்று இவை அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து அரசே வியாபாரம் செய்து வருகிறது. ஒரு வாகனம் புதி தாக வாங்கும் போதே சாலை வரி என வசூலித்து விடுகிறார்கள். பின் ஏதற்காக மீண்டும் சாலைக ளில் வழிமறித்து கட்டணம் வசூலிக்க வேண்டும்? சாலை வரியாக வசூலிக்கப்பட்ட தொகை எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்தியா முழுவதும் சாலைகளில் 540 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தமிழ கத்தில் டட்டும் 47 சுங்கச்சாவடிகள் அமைந்திருக் கின்றன. இந்த 47 சுங்கச்சாவடிகளில் 30 சுங்க சாவடி கள் சாலை அமைக்க செலவிட்ட நிதியை விட கூடுதலாக வசூலித்து முடித்து விட்டனர். ஆனா லும் இந்த சாலைகளில் தொடர்ந்து சுங்கக் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கொள்ளை போதாது என்று வருடந்தோறும் 20 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தியும் வசூலிக்கின்றன. வரு டந்தோறும் வாகன எண்ணிக்கை அதிகரிப் பிற்கு ஏற்ப சுங்க கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்பது விதி. அரசின் புள்ளிவிபரப்படி வருடத்திற்கு 20 சதவிகிதம் வாகனங்கள் அதி கரிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 20 சத விகிதம் குறைத்துத்தான் சுங்கம் வசூலிக்க வேண்டும். ஆனால் இங்கோ தலைகீழாக நடக்கிறது.
உதாரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடி 2005ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ரூ. 536 கோடியில் போடப்பட்ட சாலைக்கு கடந்த 15 ஆண்டுகளில் ரூ. 2000 கோடி வசூலிக்கப்பட்டி ருக்கிறது. ஆனாலும் முடிவின்றி வசூல் தொடர்கிறது. இந்த முறைகேட்டில் அரசிற்கும் பங்கு இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த சுங்கச் சாவடியை சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அடித்து நொறுக்கிய நிகழ்வு அரங்கேறியது.
இதுபோன்ற சம்பவம் பலநாள் கோபத்தின் ஒரு வெளிப்பாடு என்பதை அரசு உணர்ந்து அதற் கேற்ப பிரச்சனையை அணுக வேண்டும். ஏதோ ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சனை என்று சுருக்கிவிடக் கூடாது. உண்மையில் சுங்க சாலைகளில் ஒப்பந் தப்படி எந்த விதிமுறைகளையும் ஒப்பந்ததாரர் கள் பின்பற்றுவதில்லை. ஆனால் கட்டணத்தை மட்டும் எல்லாவற்றுக்கும் சேர்த்து வசூலிக் கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாலைகளுக்கு, ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தையும் நாங்களே கட்டிவிடுகிறோம்; அனைத்து சுங்கச்சாவடிக ளையும் எடுத்துவிடுங்கள் என அரசிடம் பல முறை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால் அதனை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இங்கு பிரச்சனையே கூட்டு களவாணி முதலாளித்துவம்தான். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தானே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களின் வழிப்பறி கொள்ளைக்கு விளக்கு பிடிப்பதற்கல்ல.