headlines

img

நடிப்புச் சுதேசிகள்

நடிப்புச் சுதேசிகள்

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”   என்ற வரிகள் மகாகவி பாரதியாரால் எழுதப் பட்டவை. பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை தழுவி, இந்தப் பாடலை பாரதி யார் எழுதியுள்ளார். 

வந்தே மாதரம் என்று துவங்கும் பாடல் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்தமடம் நாவலில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்த வரலாற்றுக் குறிப்பில் இந்தப் பாடல் பக்கிம் சந்திர சட்டர்ஜி யால் நாவலுக்காக எழுதப்படவில்லை என்றும், அந்நாவலில் காலியாக இருந்த ஒரு பக்கத்தில் இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு நண்பர் கூறியதாகவும், ஆனால் அதற்கு பக்கிம் சந்திர சட்டர்ஜி இணங்க வில்லை என்றும், கடுமையாக நண்பர் வற்புறுத்தி யதால்  “இது நல்லதா, கெட்டதா என்று உங்க ளால் இப்போது ஊகிக்கமுடியாது. காலம் சொல் லும். அதற்குள் நான் இறந்துவிடுவேன்” என்று அவர் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் மக்களி டையே பகைமையையும், பிரிவினையையும் தூண்டுவதற்காக இந்தப் பாடலை இப்போது உயர்த்திப் பிடிக்கிறது என்பதுதான் உண்மை. வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டின் சிறப்பு விவாதம் என்று சொல்லி இரு அவை களிலும் விவாதம் நடைபெறுகிறது. தங்களு டைய இஸ்லாமிய வெறுப்பை விசிறிவிட இந்த  சந்தர்ப்பத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

ஆனந்தமடம் நாவல் சர்ச்சைக்குரிய ஒன்று.  அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைக் கக்கும் உரையாடல்கள் இடம் பெற்றிருப்பதை நாவலைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக வைக்க வேண்டும் என் பதை அப்பொழுதே உண்மையான தேச பக்தர் கள் ஏற்கவில்லை. சில பத்திகளை நீக்கிய பிறகு முதல் 2 பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது. 

விடுதலைப் போராட்டத்தில் எந்த வகை யிலும் சம்பந்தப்படாத இன்னும் சொல்லப்போ னால், பிரிட்டிஷாரிடம் சலுகைகள் பெற்ற, மாட்டிக் கொண்டபோது மன்னிப்புக் கடிதம் எழு துவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட வர்களின் வாரிசுகள் தான் இந்துத்துவாவாதிகள் என்பதை வரலாறு நெடுகிலும் அறியமுடியும்.

வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பேசிய நரேந்திர மோடி தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக இந்தப் பாடல் அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் காப்பீட்டுத் துறை யில் நூறு சதவீத அந்நிய முதலீடு, அணுசக்தி துறையிலும் தனியார் நுழைவு உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்மொழிவுகளை நிறைவேற்ற ஒருபுறத்தில் துடிப்பவர்கள், மறுபுறத்தில் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார்கள். பாரதி யின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. “சிந்தையில் கள் விரும்பி சிவ சிவ என்பது போல் வந்தே மாதரம் என்பார்- கிளியே மனதிலதனை கொள்ளார்”.