headlines

img

கொலைக் கருவிகளை உருவாக்கும் விஷக் கருத்தியல்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விஜயதசமி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போது “நாம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் சில சமயங்க ளில் பிரச்சனை இல்லாத இடங்களில் கூட பிளவுகளை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்” என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார்.  

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கப் படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். வங்க தேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஆர் எஸ்எஸ் அமைப்பினால் வழி நடத்தப்படும் பாஜக ஆளும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சிறு பான்மை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களு க்கு எதிராக எத்தகைய தாக்குதல்கள் புல்டோசர் போல நடத்தப்படுகிறது என்பது குறித்து இவர் என் றைக்காவது பேசியது உண்டா?

விஜயதசமி வந்துவிட்டால் தர்மம், கருணை, சனாதனம் என்றெல்லாம் மூட்டை மூட்டையாக ஆர்எஸ்எஸ்காரர்கள் இறக்கி வைப்பார்கள். ஆனால் இவர்களால் முன்வைக்கப்படும் இந்துத் துவா கருத்தியல் எத்தகைய அழிவுச் சிந்தனையை உருவாக்கி வருகிறது என்பதற்கு பல்வேறு உதா ரணங்களைக் கூற முடியும். 

இந்து மதம் என்பது வேறு; இந்துத்துவா என்ற அரசியல், பண்பாட்டு, சமூக சொல்லாக்கம் என்பது வேறு. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்பு கள் முன் வைக்கும் இந்துத்துவா கருத்தியல் முழுக்க முழுக்க வெறுப்பரசியலை வீசியடிப்பது.

இதற்கு உதாரணமாக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானவர்களுக்கு இந்துத்துவா அமைப்புகள் தடபுடலாக வரவேற்பு அளித்துள்ள னர். சனாதன தர்மத்தை இவர்கள் பாதுகாத்ததாக புகழாரம் சூட்டியுள்ளனர். ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துத்துவா கருத்தியல் என்பது இத்தகைய கரு ணையற்ற, கண்ணியமற்ற பேர்வழிகளைத்தான் உருவாக்கி வருகிறது.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடது சாரி சிந்தனையாளர்கள் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகி யோரை படுகொலை செய்தது இந்துத்துவா சிந்தனை கொண்ட கும்பல்தான் என்பது விசா ரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை விமர்சிப்பவர்களை படுகொலை செய்வதும், அதை புனிதப்படுத்துவதும், கொலையாளிகளை கொண் டாடுவதும்தான் இவர்கள் கற்றுக்கொண்ட தர்மமா? இதுகுறித்து கேட்டால் ‘நான் அவனில்லை’ என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வகையறா நழுவும். ஆனால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதும் அனைத்திற்கும் மூல ஊற்று ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்பதும் ஊரறிந்த உண்மை. 

உண்மையில் இந்தியப் பண்பாடு என்பது பன் முகத்தன்மை கொண்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் பண்பாடு என்பது சகிப்புத்தன்மை யற்ற குறுகிய நோக்கம் கொண்டது. இதை நாடு நிராகரிக்கும் என்பது உறுதி.