headlines

img

மலிவான - இழிவான அரசியல்

சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித் ஷாவுக்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் இப்படி ஒரு எதிர்ப்பு எழும் என்று அக்கட்சி எதிர்பார்க்கவில்லை. இன்று மாட்டிக் கொண்டவுடன் பிரச்சனையை திசைதிருப்ப புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதற்கு அக் கட்சி தேர்வுசெய்துள்ள இடம் நாடாளுமன்ற வளாகம்.

பொதுவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கம். இது  காலம் காலமாக நடந்து வருகிறது. இதுவரை  கைகலப்பு நடந்தது இல்லை. காரணம், யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடை பெறும். ஆனால் வியாழக்கிழமை எதிர்கட்சி யினர் போராட்டம் நடத்திய பின்னர் அவைக்குச் செல்ல முயன்றனர். நாடாளுமன்றத்தில் பிரதான நுழைவாயில் முன்பு ஆளும் பாஜகவினர் திட்ட மிட்டு போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவும் நுழைவாயிலை மறித்து நடத்தினர்; மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மற்றும் அக்கட்சியின் இதர உறுப்பினர்கள் உள்ளே சென்றபோது அவர்கள் வழிவிட்டிருக்க வேண் டும்.  வழிவிடாமல் அவரை தள்ளிவிட்டுள்ளனர். 

இதை மறைத்து, ராகுல்காந்தி தள்ளிவிட்ட தால்தான் பாஜக உறுப்பினர் சாரங்கி தலையில் காயமடைந்தார் என்று பொய் பேசுகிறார்கள். அம்பேத்கர் விஷயத்தில் நாடு முழுவதும் எழுந்த கண்டனத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பாஜக, திட்டமிட்டு இந்த நாட கத்தை நடத்தியுள்ளது வெளிப்படையாக தெரி கிறது.  பாஜக மூத்த உறுப்பினரை ராகுல் தள்ளி விட்டிருந்தால் அது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருக்கும். அதை வெளி யிட நாடாளுமன்றச் செயலகம் மறுக்கிறது. 

ஒருவேளை ராகுல்காந்தி தள்ளியதைப் போன்று காட்சிகளை டிபேக் தொழில் நுட்பத்தில் போலியாக உருவாக்க முயற்சிக்கிறார்களோ என்னவோ? நாடாளுமன்றத்தை கலவர மன்ற மாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் சமூக வலைதளப் பதிவு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர், பாஜக பெண் உறுப்பினர்களிடம் முறைகேடாக  நடந்து கொண்டார் என்று அபாண்டமான குற்றச் சாட்டை அவர் கூறியிருப்பதோடு பதிலுக்கு பதில் அடித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் வன்முறையைத் தூண்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையை பெறமுடி யாத நிலைக்கு சென்ற பாஜகவுக்கு வலுவான எதிர்க்கட்சிகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளி அவரது செயல்பாடு களை முடக்க முயற்சிக்கிறது. 

வலுவான   ஜனநாயகத்திற்கு அரசும் எதிர்க் கட்சிகளும் அவசியம் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் பெறவில்லை. பாஜகவின் இத்தகைய இழிவான அரசியல் நடைமுறை, இந்தியாவை அழிவுப்பாதைக்கு தான் இட்டுச் செல்லும்.