headlines

img

உத்வேகம் அளிக்கும் விருது

வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது தமிழ் ஆய்வுலகிற்கு கிடைத்த பெரும் மகிழ்ச்சி. தமிழ்ச் சமூகம் மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தனித்துவமான பங்களிப்பை ஆற்றி வருகிறார்.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்க ழகத்தில் கல்வி கற்ற இவர், தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்து வருகிறார். வ.உ.சி., சுப்ரமணிய பாரதி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பங்களிப்பு களையும் புதிய கோணத்தில் ஆராய்ந்து பல முக்கிய நூல்களை படைத்துள்ளார்.

வெறும் 17 வயதிலேயே “வ.உ.சி. கடிதங்கள்” என்ற நூலை வெளியிட்ட இவர், அதன் பிறகு தொடர்ந்து பல முக்கிய படைப்புகளை தந்துள்ளார். “ஆஷ் அடிச்சுவட்டில்” என்ற கட்டு ரைத் தொகுப்பு, “தமிழ் எழுத்தாளர்கள்” போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தி இந்து பத்திரி கையில் சுப்ரமணிய பாரதியின் கடிதங்களை தொகுத்து வெளியிட்டதும் இவரது குறிப்பி டத்தக்க பணிகளில் ஒன்று.

தற்போது சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூல், வ.உ.சி. பற்றிய முதல் முழுமையான ஆய்வு நூலாக கருதப்படுகிறது. இந்நூலில் திருநெல்வேலி கலவரத்தில் பங்கேற்ற சாதாரண மக்களின் பங்களிப்பை விரிவாக ஆவ ணப்படுத்தியுள்ளார். ஜட்கா ஓட்டுநர்கள், முடி திருத்துபவர்கள், உணவகம் நடத்துபவர்கள், தங்க வேலை செய்பவர்கள், ஓய்வு பெற்ற காவ லர்கள், மருத்துவர்கள், கால்நடை வியாபாரிகள் என பல்வேறு தொழில் செய்யும் மக்கள் இந்த எழுச்சியில் பங்கேற்றதை தெளிவாக பதிவு செய்துள்ளார்.

வேங்கடாசலபதி அவர்களின் ஆய்வுப் பணி களில் ஆவணங்களைத் தேடி கண்டறிதல், பழைய  கடிதங்கள், அரசு ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள், தனிப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து புதிய தகவல்களை வெளிக்கொணர் வது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக வரலாற்று நோக்கில் சாமானிய மக்களின் பங்களிப்பு, பொது மக்களின் எழுச்சி, சமூக மாற் றங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி ஆய்வு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்.

தமிழ் மொழி, இலக்கியம் குறித்த அவரது ஆய்வுகள் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பத்திரி கைகள், தமிழ் அச்சு ஊடகங்களின் வளர்ச்சி குறித்த புதிய பார்வையை வழங்குகின்றன. அவரது எழுத்து நடை எளிமையானது, ஆனால் ஆழமான கருத்துக்களை கொண்டது சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள இவரது நூல், இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்; ஊக்கமளிக்கும். தமிழக வரலாற்றை ஆவணப்படுத்தும் இவரது அரிய பணி தொடர இந்த விருது மேலும் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.