headlines

இயற்கைப் பேரிடர்களும், இரக்கமில்லா அணுகுமுறையும்

தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநில அரசு தன்னால் இயன்ற அனைத்து வகை யிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மழைப்  பொழிவு நின்ற பிறகு தான் சேத விவரங்கள் முழுமையாக தெரியவரும். 

இத்தகைய இயற்கைப் பேரிடர்களை மாநில அரசுகள் மட்டுமே சமாளிப்பது இயலாத காரியம். ஒன்றிய அரசும் உதவிக்கரம் நீட்டுவது அவசியம். ஆனால் தமிழ்நாடு, கேரளம் உட்பட எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு இயற்கைப் பேரிடர் நிதி ஒதுக்குவதில் கூட ஒன்றிய பாஜக கூட்டணி அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

இத்தகைய இயற்கைப் பேரிடர்களை மாநில அரசுகள் மட்டுமே சமாளிப்பது இயலாத காரியம். ஒன்றிய அரசும் உதவிக்கரம் நீட்டுவது அவசியம். ஆனால் தமிழ்நாடு, கேரளம் உட்பட எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு இயற்கைப் பேரிடர் நிதி ஒதுக்குவதில் கூட ஒன்றிய பாஜக கூட்டணி அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

2010- 11 முதல் 2019 - 20 வரையிலான பத்தாண்டு களில் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு கோரியது. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.9 ஆயிரத்து 390 கோடி மட்டுமே என தகவல் அறியும் உரி மைச்சட்டத்தின்படி தெரிய வந்துள்ளது. 

அடுத்தடுத்து வறட்சி, வர்தா புயல், ஒக்கி புயல்,  கஜா புயல் என தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதும், உரிய நிதி ஒதுக்க ஒன்றிய அரசு முன் வரவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ளச் சேதங்களுக்கு மிகவும்  சொற்பமான நிதியையே ஒன்றிய அரசு ஒதுக்கியது. 

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு துயரத் திற்கு நிதி உதவி செய்வதற்கு ஒன்றிய அரசு தாமதம் செய்வதை கண்டித்து கேரள சட்டப்  பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சட்டப் பேரவை அலுவல் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கொண்டு வந்த தீர்மா னத்தின்மீது பேசிய அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் களின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான அதிகாரம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்த ஒன்றிய அரசு தலை யிட்டு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என்றும், கேரள மாநில சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து உதவிக்கரங்கள் நீண்டன. கேரள மாநில இடது ஜனநாயக முன் னணி அரசு வயநாட்டு சேதத்தை சரி செய்ய வும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பாதுகாக்கவும் அனை த்து முயற்சிகளையும் மேற்கொண்டது. தொடர்ந்து அத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளது. இயற் கைப் பேரிடர்களால் மட்டுமின்றி தொற்று நோய் தாக்குதல்களாலும் தொடர்ந்து கேரளம் பாதிக்கப் பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு இரக்கமில் லாமல் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது. மாநிலங்கள் இடையே பாரபட்ச அணுகு முறையை கைவிட்டு கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்.