இலங்கையில் முதல்முறையாக இடதுசாரி கட்சி தலைமையில் அரசு அமைய உள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரித் தலைவரான அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்நாட்டின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக திஸாநாயக்க பதவி யேற்றார். உடனே அவர் நாடாளுமன்றத்தை கலை த்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறி வித்தார். இதன்படி கடந்த வியாழக்கிழமை நடை பெற்ற தேர்தலின் போது இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களி டையே ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சியைக் காண முடிந்தது.
கடைசியாக கிடைத்த தகவல்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள் ளது. முதல்முறையாக இலங்கை வரலாற்றில் ஒரு கட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எல்லா பகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் ஒரு தேசிய கட்சி பெரும்பான்மையான இடங் களை கைப்பற்றியுள்ளதும் இதுவே முதல்முறை.
மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெறும் 2 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. ராஜபக்சேவின் இரு மகன்களும் தோல்வியடைந்தனர். கடந்த காலங்களில் ஆளும்கட்சியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலி லும் படுதோல்வி அடைந்துள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்திக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை வழங்குமாறு மக்களிடம் அனுர குமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட மக்கள் நல்லதொரு தீர்ப்பினை அளித்துள்ளனர்.
2022 மக்கள் எழுச்சியின் காரணமாக அப் போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு ஓடினர். இடைக்கால ஏற்பாடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை.
அனைத்து அதிகாரம் கொண்டதாக உள்ள ஜனாதிபதி என்பதை மாற்றி, அனைத்து அதி காரம் கொண்ட நாடாளுமன்றம், ஊழக்கு எதிரான உறுதியான நடவடிக்கை, தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி, தமிழர்களிடமிருந்து பறிக்கப் பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை இடதுசாரிக் கூட்டணி மக்களுக்கு அளித்தது. இந்த வாக்குறு திகளுடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனைக்கு தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை யும், மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்திக் கூட்டணி அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசை வாழ்த்துவோம்.