அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை வாசி இந்தியாவில் மிகக் கடுமையாக உயர்ந்துள் ளது. குறிப்பாக அரசின் புள்ளி விவரப்படியே அக் டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் எச்சரிக்கை அளவை மீறி 6.21 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது.
குறிப்பாக உணவுப் பொருட்கள் விலைவாசி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 11 சத விகிதம் உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலைவாசி கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 42 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்தி யாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் மட்டுமின்றி, மத்தியதர வர்க்கமும் இந்த விலை வாசி உயர்வினால் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
எனினும் உணவுப் பொருட்கள், எண்ணெய் வகைகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் விலைகளைக் கட்டுப்படுத்து வதற்கு ஒன்றிய அரசு நேரடியாகத் தலையிட மறுக்கிறது. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நிபுணர்கள், ஜிடிபி எனப்படும் மொத்த உள் நாட்டு உற்பத்தி 6 சதவீதத்திற்கு குறைந்து விடக் கூடாது என்பதைப் பற்றியே கவலைப்படுகின்ற னர். எனவே சில்லரைப் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மோடி அரசு முன் வரவில்லை. தமது கார்ப்பரேட் நண்பர்கள் எண்ணெய் விற்பனையில் ஈட்டும் லாபம் பாதிக்கப் படக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். எரிபொருள் விலையைக் குறைத்து இருந்தால், உணவு தானியங்கள் விலை உயர்வைக் கட்டுப் படுத்தி இருக்க முடியும்.
அத்துடன் உரங்களின் விலையைக் கட்டுப் படுத்தவும் ஒன்றிய அரசு தவறிவிட்டது. உர உற் பத்தியில் ஒன்றிய அரசின் அலட்சியம் காரண மாக உரப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலை யில், தனியார் விற்பனையாளர்களை நம்பியி ருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். இந்திய ஒன்றிய ஆட்சியாளர்க ளின் அலட்சியம் மற்றும் துரோகத்தால் விவசாயி கள் பாதிக்கப்படுவதுடன், உணவுப் பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் விலைவாசி கடுமையாக உயர்ந்தி ருக்கும் நிலையில், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 கோடிப் பேரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நகர்ப்புற வேலை இல்லா திண்டாட்டமும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக் காத, ஒன்றிய மோடி அரசின் பாராமுகம் என்பது இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு யுத்தம் ஆகும்.