headlines

img

புல்டோசரை விட அரசியல் சட்டம் வலிமையானது

புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது. பாஜக ஆளும் மாநில அரசுகள் சிறு பான்மை மக்களுக்கு எதிராக நடத்தி வரும் அட்டூ ழியங்களுக்கு தடுப்பணை போடுவதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. 

குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்க ளுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாகக்கூறி புல்டோசர் மூலம் இடிக்கும் நட வடிக்கை சட்ட விரோதமானது என்று உறுதிபட தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் அரசு அதிகாரி கள் தங்களை நீதிபதிகள் போல நினைத்துக் கொண்டு புல்டோசர் நடவடிக்கைகளில் ஈடுபடு வது அதிகாரப் பகிர்வு தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

ஒருபடி மேலே சென்று சட்ட விரோத ஆக்கிர மிப்புகளை அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்க ளை மீறும் அதிகாரிகள் இடிக்கப்பட்ட கட்டிடத்தை தங்களின் சொந்த செலவில் சரி செய்து கொடுக்க வும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற் கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை யும் உச்சநீதிமன்றம் வகுத்து தந்துள்ளது. பாஜக ஆளும் உ.பி., மாநிலத்தில் தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக புல்டோசர் நட வடிக்கைகள் மிக அதிகமாக மேற்கொள்ளப்படு கின்றன. இதுகுறித்து பாஜகவினர் பெருமிதம் கொள்கின்றனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது புல்டோச ரை எப்படி பயன்படுத்துவது என்று உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம்  கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். உ.பி., பாஜக முதல்வர் தன்னுடைய பிரச்சாரத்தில் புல்டோ சரை காட்டி மக்களை அச்சுறுத்தினார். 

இப்போது உச்சநீதிமன்றம் இத்தகைய நட வடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானது என கண்டித்துள்ளது. தலைநகர் புதுதில்லியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி ஏழை, எளிய இஸ்லா மிய மக்களின் குடிசைகளை இடிக்க புல்டோசர் அனுப்பப்பட்ட போது, அதன் முன்னால் நின்று நீதி மன்ற உத்தரவைக் காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வாதாடி தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் ஆக்கிரமிப்புகளை அகற்று வது பாஜக மாநில அரசுகளின் நோக்கமல்ல. மாறாக, தங்களை எதிர்க்கும் பிரிவினரை அச்சு றுத்த ஒரு ஆயுதம் போலவே புல்டோசரை பாஜக மாநில அரசுகள் பயன்படுத்தின. இனிமேலாவது அவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொள்ளாமல் இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசதி படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் எளிய மக்களின் குடிசைகளை அகற்றும் ஆட்சியாளர்களுக்கும் உச்சநீதிமன்றத் தின் வழி காட்டு நெறி முறைகள் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.